Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

'நிறுவனர்களின் வெற்றியில் குடும்பத்தின் பங்கு பற்றி யாரும் பேசுவதில்லை’ - Dream11 ஹர்ஷ் ஜெயின்!

'நிறுவனர்களின் வெற்றியில் குடும்பத்தின் பங்கு பற்றி யாரும் பேசுவதில்லை’ - Dream11 ஹர்ஷ் ஜெயின்!

Saturday March 25, 2023 , 2 min Read

டிரீம் 11 (Dream11) இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் தான் உருவாக்கிய கற்பனை விளையாட்டு மேடை வெற்றி மற்றும் தனது தனிப்பட்ட வெற்றிக்கு வாழ்க்கைத்துணை மற்றும் குடும்பத்தின் ஆதரவு முக்கியக் காரணம் எனத் தெரிவித்தார்.

"ஒரு நிறுவனம் யூனிகார்ன் அல்லது டெகாகார்ன் அந்தஸ்து பெறும் போது, நிறுவனர்களே பாராட்டுக்கு உள்ளாகின்றனர். ஆனால், குடும்பத்தினரை யாரும் பாராட்டுவதில்லை, முக்கியமாக நிறுவனர்களின் மனைவியின் பங்கை யாரும் குறிப்பிடுவதில்லை,” என டெக்ஸ்பார்க்ஸ் மும்பை நிகழ்வில் பேசிய ஹர்ஷ் ஜெயின் கூறினார்.
டெக்

ஒரு நிறுவனர் எதிர்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் வாழ்க்கைத்துணையும் எதிர்கொண்டாலும், அவரது பங்களிப்பு பற்றி யாரும் பேசுவதில்லை, என்று அவர் கூறினார்.

"இது ஒருபோதும் உங்கள் தனிப்பட்ட கதை அல்ல என்று கூறினார். சர்வதேச பெண்கள் தினத்தன்று ஜெயின் பல் மருத்துவரான தனது மனைவி ரச்சனா ஜெயின் தான் டீரிம் 11 நிறுவன வெற்றிக்குக் காரணம் எனக் கூறியிருந்தார்.

2019ல் இந்த ஸ்டார்ட்அப் அப் இந்தியாவில் யூனிகார்ன் அந்தஸ்து அல்லது ஒரு பில்லியன் டாலர் சந்தை மதிப்பு பெற்ற முதல் கற்பனை விளையாட்டு மேடை இந்திய நிறுவனமாக விளங்கியது. தற்போது இதன் சந்தை மதிப்பு 8 பில்லியன் டாலராக அமைகிறது.

"என் வெற்றிக்குப் பின் இருக்கும் கண்ணுக்குத்தெரியாத சக்தியாக ’ரச்’ இருக்கிறார். அவரே என் ஆலோசனை மேடையாக, பயிற்றுனராக, ஆக்கப்பூர்வமான விமர்சகராக, அழுவதற்கான தோளாக, முழுவதும் களைத்துப்போகாமல் நான் சமநிலையில் இருக்க உதவுபவராக, பொருள் மற்றும் அலுவலக வடிவமைப்பாளராக, மனிதவள மேம்பாடு அதிகாரியாக, மார்க்கெட்டிங் அதிகாரியாக இன்னும் பலவாக இருக்கிறார்,” என அவர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

டெக்ஸ்பார்க்ஸ் மும்பை நிகழ்ச்சியில், நிறுவனர்கள் சிறப்பாக செயல்படுவதில் குடும்பத்தின் பங்கை வலியுறுத்தினார்.

"உங்களை அறைந்து கீழே இறக்கிக் கொண்டு வந்து, மீண்டும் யதார்தத்திற்கு குடும்பம் கொண்டு வருகிறது என்று கூறியவர், வெற்றி உங்களை தலைக்குள் ஏறாமல் இருக்க குடும்பம் உதவுகிறது,” என்றார்.
harsh jain dream11

Harsh Jain, CEO, Dream11

நிறுவனர்கள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சனைகள் குறித்தும் பேசினார்.

"தொழில்முனைவோராக பல காரணிகள் உள்ளன. தொழிலில் இருக்கும் போது உங்களால் வேறு நிலைக்கு மாற முடியாது. நிறுவனர்கள் பலவிதமான மனநலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்,” என்று கூறினார்.

வெளிநாடுகளில் படித்துக்கொண்டிருந்த போது, 2001ல் ஜெயின் கற்பனை விளையாட்டு மேடையில் ஆர்வம் கொண்டார். 2008ல் அவர் ஸ்போர்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் கீழ் டிரீம் 11 –ஐ உருவாக்கினார். இந்த மேடை, கற்பனை கபடி, கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடும் 160 மில்லியன் பயனாளிகளை பெற்றுள்ளது.

டிரீம் 11, டிஎஸ்டி குளோபல், டைகர் குளோபல் மேனஜ்மெண்ட், பால்கன் எட்ஜ் மற்றும் கலாரி கேபிட்டல் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி பெற்றுள்ளது. இந்த மேடை டிரீம் கேபிடல் எனும் முதலீடு பிரிவு மூலம், மின் விளையாட்டு, உபகரணங்கள், நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் நிதி நுட்பம் ஆகிய பிரிவுகளில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

ஆங்கிலத்தில்: பிரசன்னட்டா பட்வா | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan