ரூ.10 லட்சம் மானியம் - வேளாண் ஸ்டார்ட்-அப்’களுக்கு TANSIM நடத்தும் ஹேக்கதான்!

By Kani Mozhi
November 11, 2022, Updated on : Fri Nov 11 2022 05:01:34 GMT+0000
ரூ.10 லட்சம் மானியம் - வேளாண் ஸ்டார்ட்-அப்’களுக்கு TANSIM நடத்தும் ஹேக்கதான்!
வேளாண் துறைக்கான நிரல் திருவிழா (Hackathon) 2022" - யில் வேளாண் துறையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் புத்தாக்க, தொழில் நுட்ப தீர்வுகளை வழங்கக்கூடிய புத்தொழில் நிறுவனங்கள் ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

குறு,சிறு மற்றும் நடுத்தர துறை மற்றும் வேளாண் துறை சார்பில் தொடங்கியுள்ள "வேளாண் துறைக்கான நிரல் திருவிழா (Hackathon) 2022"- யில் வேளாண் துறையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் புத்தாக்க, தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கக்கூடிய புத்தொழில் நிறுவனங்கள் ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

வேளாண் திருவிழா:

குறு, சிறு மற்றும் நடுத்தர துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் - நீண்ட நாட்களாக விவசாயத் துறையில் சவாலாக விளங்கும் சில தேவைகள் மற்றும் சிக்கல்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காணும் நோக்கத்தை முன்வைத்து "வேளாண் துறைக்கான நிரல் திருவிழா (Hackathon) 2022" நிகழ்வினை அறிவித்துள்ளது.


வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நடப்பாண்டு (2022-2023) வேளாண் நிதிநிலை அறிக்கையில், தமிழக அரசின் வேளாண் துறையும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமும் இணைந்து ’வேளாண் நிரல் திருவிழா’ (Agri Hackathon) -வினை ஒருங்கிணைக்கும் என அறிவித்தார்.

agritech

(Representative image)

அதன் தொடர்ச்சியாக வேளாண் துறையினை சார்ந்த சிக்கல்களுக்கு புத்தாக்க தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் விதமாக நிரல் திருவிழா (Hackathon) இன்று தொடங்கியுள்ளது.


வேளாண் துறையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் புத்தாக்க, தொழில் நுட்ப தீர்வுகளை வழங்கும் புத்தொழில் நிறுவனங்கள் இந்த நிரல் திருவிழாவில் பங்கேற்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக அரசின் மாஸ் திட்டம்:

வணிக ரீதியில் பயனளிக்கும் வகையில், புத்தாக்க சிந்தனைகளோடு செயல்படும் புத்தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 10 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.


குறிப்பாக கீழ்க்காணும் நான்கு சிக்கல்களுக்கு புதுமையான, ஆக்கபூர்வமான, நடைமுறையில் செயல்படுத்தக் கூடிய தீர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது.


● பனை மரம் ஏறுவதற்கு தேவையான இயந்திரக் கருவிகள்

● மரவள்ளி கிழங்கு அறுவடை மற்றும் மண் நீக்கி சுத்தம் செய்வதற்கான கருவிகள் (ஒருங்கமைந்த அல்லது தனித்தனி கருவிகள்)

● வேளாண் பயிர்களை சந்தைபடுத்துவதற்கு முன்பான தர பரிசோதனைக்காக ஒவ்வொரு முறையும் ஆய்வகத்திற்கு செல்லும் நேரத்தினை குறைக்கும் விதமாக விவசாய நிலத்திலோ அல்லது வணிகம் பரிவர்த்தனை நடக்கும் இடத்திலோ பயிர்தர பரிசோதனை செய்வதற்கான புத்தாக்க தீர்வுகள்

● உணவு மற்றும் வேளாண் பயிர்கள் விரைவில் கெட்டுப்போகாத வண்ணம் அதன் “தன்ஆயுளை” (Shelf life) அதிகரிக்க உதவும் புத்தாக்க தீர்வுகள்


இது சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வைத்திருக்கும் புத்தொழில் நிறுவனங்கள், புத்தொழில் ஆர்வலர்கள், மாணாக்கர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம். மேலும், இது குறித்தான தகவல்களை அறிந்து கொள்ள www.startuptn.in இணைய தளத்தினை பார்வையிடவும். தங்களது புத்தாக்க தீர்வுகளை நவம்பர் 25, 2022 மாலை 5.00 மணிக்கு முன்னதாக மேற்கூறிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த வல்லுநர் குழுவால் தேர்வு செய்யப்படும். முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இது சார்ந்து டிசம்பர் 2022 முதல் வாரத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்பர்.


பின்பு, டிசம்பர் மாதம், இரண்டாவது வாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும் நிறைவு நிகழ்வு நடைபெறும். வெற்றி பெறுபவர்களுக்கு தொடர்ந்து தீர்வுகளை வணிக ரீதியில் பயனளிக்கும் வகையில் நடைமுறைபடுத்துவதற்கான முதலீட்டு உதவி, வழிகாட்டுதல், இன்ன பிற ஆதரவுகள் வழங்கப்படும்.