வீடு கூட்டி பெருக்க ரூ.800, சப்பாத்தி செய்ய ரூ.1000: வைரலான விசிட்டிங் கார்டு!

வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்ணின் விசிட்டிங் கார்ட் ஆன்லைனில் வைரலாக, இந்தியாவின் மூலை முடுக்கிலிருந்தும் வேலைவாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகிறது.

10th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

புனே மாநிலத்தின் பவ்தன் எனும் பகுதியில் வீட்டுவேலை செய்து வந்த பணிப் பெண்ணின் விசிட்டிங் கார்டு, சோஷியல் மீடியாக்களில் வைரலாகியதில், ஒரே நாளில் இன்டர்நெட் சென்சேஷனாகியுள்ளார் பணிப்பெண் கீதா காலே.

“கீதா காலே, பவ்தானில் வீட்டுவேலைக்கு அணுகலாம். ஆதார் கார்ட் வெரிஃபைட்,” என்று குறிப்பிட்டிருந்த அவரது விசிட்டிங் கார்டு ஐடியா, விஐபி-க்களை (வேலையில்லா பட்டதாரி) கவர்ந்து வருகிறது.

கீதா தற்போது பணிபுரிந்துவரும் வீட்டின் உரிமையாளர் தானாஸ்ரீ ஷிண்டே தான் வித்தியாசமாய் யோசித்து விசிட்டிங் கார்ட்டை தயார் செய்து கொடுத்தவர். இரு தினங்களுக்கு முன்பு ஆபிஸ் வேலை முடிந்து தனுஸ்ரீ வீடு திரும்பிய போது, கீதா சோகமாக இருப்பதை கண்டுள்ளார். சோகத்திற்கான காரணம் பற்றி கேட்டதற்கு,

“நான் வீட்டு வேலை செய்துவந்த ஒரு வீட்டில் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டனர். 4000ரூபாய் சம்பளம் போயிருச்சு. அடுத்து என்ன பண்றதுனே தெரியல. புதுசா ஒரு வேலையை தேடணும்,” என்று வருத்ததுடன் பகிர்ந்துள்ளார் கீதா.
Maid card

இதைத் தொடர்ந்து, தானாஸ்ரீ போனை நொண்டிக் கொண்டிருந்த வேளையில், பட்டென விசிட்டிங் கார்டுகளை வடிவமைக்கும் இணையதளம் பற்றி ஞாபகத்துக்கு வந்துள்ளது. உடனே, கீதாவுக்கு ஒரு விசிட்டிங் கார்டு உருவாக்கினாலென்ன என்ற யோசனையில் வேலையில் இறங்கியுள்ளார். அவர்கள் விசிட்டிங் கார்டை எவ்வாறு உருவாக்கினார்கள் என்பதை விவரிக்கும் தானாஸ்ரீ ஷிண்டே, இது இன்டர்நெட் வைரலாகும் என்று நினைக்கவில்லை என்கிறார்.

“சமையலறையில் வேலை செஞ்சிட்டு இருந்த கீதாவை கூப்பிட்டு, பக்கத்தில் உட்காரச் சொல்லி என்ன வேலைக்கு என்ன கட்டணம் வாங்குறாங்கனு கேட்டு, நோட் பண்ணிக்கிட்டேன். அடுத்த 10 நிமிஷத்தில் விசிட்டிங் கார்டை வடிவமைத்துவிட்டேன். மக்களுக்கு கீதா மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காக ‘ஆதார் கார்டு வெரிஃபைடு’ என்ற வரியைச் சேர்த்தேன். அப்படியே, 100 விசிட்டிங் கார்டு அச்சிட ஆர்டர் கொடுத்தேன்.

அதில் துணி துவைக்க- ரூ.800, கூட்டி பெருக்க- ரூ.800, சப்பாத்தி செய்ய- ரூ.1000 என்று பட்டியலிட்டு கீதாவின் பெயர், அவரின் போன் நம்பர் போட்டு கார்டு அசிடப்பட்டிருந்தது. கார்ட் அடியில் கூடுதலாக தேவைப்பட்டால் வீடு சுத்தம், மற்றும் காய்கறி நறுக்கும் பணிகளும் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு கட்டு விசிட்டிங் கார்டு கைக்குக் கிடைத்தது. நான், கீதாவிடம் கொடுத்து அக்கம் பக்கத்து அபார்ட்மெர்ன்ட்டுகளில் உள்ள வாட்ச்மேன்களிடன் விசிட்டிங் கார்டை கொடுக்கச் சொன்னேன்,” என்றார் தானாஸ்ரீ.


தானாஸ்ரீ ஒரு சில விசிட்டிங் அட்டைகளை மட்டும் அவருக்காக எடுத்துள்ளார். மேலும், அவர் விசிட்டிங் கார்டின் புகைப்படத்தை அவருடைய நண்பர் ஒருவருடன் வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார்.

“அடுத்த நாள், கீதா வேலைக்கு வந்தபோது, மும்பையைச் சேர்ந்த ஒருவருடன் போனில் பேசிக்கொண்டே வந்தார். அது தான் ஆரம்பம். அதே நாளில், டுவிட்டர், ஃபேஸ்புக்கில் விசிட்டிங் கார்டு புகைப்படத்தைப் பார்த்தேன். சிலர் அதைப் வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்ததை கண்டேன். உடனே, நான் கீதாவை போனில் அழைத்தேன். ஆனால் அவளுடைய தொலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு, அவரது கணவரை போனில் அழைத்தபோது, கீதாவுக்கு தொலைபேசி வந்து கொண்டே இருப்பதால், கீதா அவரது தொலைபேசியை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டதாகவும் கூறினார்,” என்று பகிர்ந்தார் தானாஸ்ரீ.


உண்மையில், கீதா யாருடனுமே விசிட்டிங் கார்டையைப் பகிர்ந்து கொள்ளவில்லை. அதனால், தானாஸ்ரீ அவருடைய நண்பருக்கு விசிட்டிங் கார்டை கொடுத்துள்ளார். விசிட்டிங் கார்ட் ஐடியாவை ரசித்த அவரது நண்பர் அதை சில வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்துள்ளார். அங்கிருந்து தான் மற்ற சமூக வலைதளங்களை அடைந்தது எனும் தானாஸ்ரீ தொடர்ந்து கூறுகையில்,

“விசிட்டிங் கார்ட் மூலம் அவருக்கு புதிய வேலைகள் கிடைக்கவேண்டும் என்பதையே நான் உண்மையில் விரும்பினேன். அதற்கு பதிலாக அது வைரலாகிவிட்டது. அவருக்கு பவ்தன் ஏரியாவிலிருந்தும் நிறைய அழைப்புகள் வந்ததுள்ளன. வரும் நாட்களில் புதிய பணிகளை தொடங்கவுள்ளார். அவளுக்கு ஏற்பட்ட அனைத்து தொல்லைகளுக்கும் மேலாக, பவ்தன் பகுதியில் அவர் இழந்த வேலையை சரிக்கட்டும் விதத்தில் அதேபகுதியில் மற்றொரு வேலையைக் கண்டுபிடித்துள்ளார். எல்லாவற்றிருக்கும் மேலாக இது வைரல் பதிவாக மாறியதில், நன்மையை அளித்துள்ளது,” என்றார் அவர்.

தகவல் உதவி: Pune Mirror
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Our Partner Events

Hustle across India