இந்தியாவுக்கு வந்த 1.5 லட்சம் Sputnik V ரஷ்ய தடுப்பூசி: இந்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்!

முதல்கட்டமாக 1.5 லட்சம் தடுப்பூசிகள் வருகை!
0 CLAPS
0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தற்போது சீரம் நிறுவனம் தயாரிப்பான கோவிஷீல்ட், மற்றும் பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரிப்பான கோவாக்சின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. எனினும் அதிகரித்து வரும் பரவல் காரணமாக 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்திருந்தது.

ஆகஸ்ட் 11, 2020 அன்று, ஸ்புட்னிக்-வி என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்த உலகின் முதல் நாடாக ரஷ்யா ஆனது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யாவின் ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம், இந்தியாவில் உள்ள ரெட்டீஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன்படி, தொற்றுநோய்வியல், நுண் உயிரியலுக்கான காமாலியா தேசிய ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் என்பது தான் ஒப்பந்தம். ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கான கிளினிக்கல் பரிசோதனையை ரெட்டீஸ் நிறுவனம் முடித்துவிட்டது. இதையடுத்து தற்போது 100 மில்லியன் தடுப்பூசி அளவுகளை விநியோகிப்பதற்கான உரிமையை அந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அதன்படி,

முதல் கட்டமாக 1.25 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசிகளை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் முடிவு செய்து, 150,000 டோஸ் தடுப்பூசிகள் சனிக்கிழமை இந்தியா வந்தடைந்தது. இவை ஹைதராபாத் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் அடுத்தடுத்த டோஸ்கள் வரும் என்று அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
”தடுப்பூசியின் முதல் 150,000 டோஸ் ரஷ்யாவிலிருந்து ஹைதராபாத்தில் தரையிறங்கியதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

தடுப்பூசிகள் தேவையான அனுமதிகளுக்கு உட்பட்டது. இது அடுத்த சில நாட்களில் செயல்படுத்தப்படும். இது எங்கள் சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் இலாகா மூலம் இந்தியாவில் கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதில் டாக்டர் ரெட்டியின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது," என்று இது தொடர்பாக பேசியுள்ள டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் தீபக் சப்ரா தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

இந்த மாதத்தில் இருந்து இந்த தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க இறக்குமதி செய்யப்பட்ட இந்த தடுப்பூசிகளை அவசரமாக பயன்படுத்த அரசாங்கம் கடந்த மாதம் அனுமதித்தது மற்றும் அவற்றின் இறக்குமதிக்கான சுங்க வரிகளை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Latest

Updates from around the world