மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்த சாம் ஆல்ட்மேன் - OpenAI-க்கு ஷாக் கொடுத்த சத்ய நாடெல்லா!
OpenAI-யில் இருந்து நீக்கப்பட்ட சாம் ஆல்ட்மேன் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து செயல்படுவார் என அதன் சிஇஓ சத்ய நாடெல்லா தெரிவித்துள்ளார்.
OpenAI-யில் இருந்து நீக்கப்பட்ட சாம் ஆல்ட்மேன் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து செயல்படுவார் என அதன் சிஇஓ சத்ய நாடெல்லா தெரிவித்துள்ளார்.
'ஓபன் ஏஐ'யின் (
) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மற்றும் முன்னாள் தலைவர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொடர்பான மேம்பட்ட ஆராய்ச்சிக்கான புதிய குழுவை வழிநடந்துவார்கள் என சத்யா நாதெல்லா இன்று அறிவித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ChatGPT-யின் தாய் நிறுவனமான OpenAI வாரியம், சாட்ஜிபிடியின் இணை நிறுவனரான ஆல்ட்மேன் மற்றும் தலைவர் கிரெக் ப்ரோக்மேனை நீக்குவதாக அறிவித்தது.
செயற்கை நுண்ணறிவு போட்டியில் சாட்ஜிபிடி முக்கியத்துவம் பெற சாம் ஆல்ட்மேனின் பங்களிப்பு மிகப்பெரியது. இதனையடுத்தே கூகுள், மெட்டா போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் செயற்கை நுண்ணறிவுக்குள் காலடி எடுத்துவைத்தனர்.

இந்நிலையில், சாம் ஆல்ட்மேன் எதையும் தெளிவாகக் கூறுவது இல்லை, அவரது பணியின் மீது இனி நம்பிக்கை இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி அவரை Open AI போர்டு நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, Chat GPT-க்கு கோடிகளில் முதலீடு செய்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதாவது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் AI-யை பிரிவை சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரே ப்ரோக்மேன் வழிநடத்துவார்கள் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“OpenAI உடனான எங்கள் கூட்டாண்மைக்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றும் எங்கள் தயாரிப்பு வரைபடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம், மைக்ரோசாஃப்ட் இக்னைட்டில் நாங்கள் அறிவித்த அனைத்தையும் தொடர்ந்து புதுமைப்படுத்துவதற்கான எங்கள் திறன் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களைத் தொடர்ந்து ஆதரிக்கிறோம். எம்மெட் ஷியர் மற்றும் OAI இன் புதிய தலைமைக் குழுவைப் பற்றி அறிந்து அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம். சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன், தனது சகாக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து, புதிய மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்துவார்கள் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று நாதெல்லா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
சத்ய நாடெல்லாவின் இந்த அறிவிப்பை சாம் ஆல்ட்மேனும் உறுதியுள்ளார், இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பணி தொடர்கிறது (the Mission continued) என பதிவிட்டுள்ளார்.
மைக்ரோசாப்டின் புதிய மேம்பட்ட AI ஆராய்ச்சி குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆல்ட்மேன் இருப்பார் எனவும் நாதெல்லா கூறினார். மைக்ரோசாப்ட் நிறுவனம் மொழி மாதிரிகளைப் பயிற்றுவிக்கும் திறன் கொண்ட ஏஐ சிப் ஒன்றினை மைக்ரோசாப்ட் உருவாக்கி இருப்பதாக அண்மையில் நாதெல்லா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ChatGPT-யை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் திடீர் நீக்கம்; OpenAI-க்குள் நடந்தது என்ன?