மனித ரத்தத்தை கலந்து தயாரிக்கப்பட்ட சாத்தான் ஷூ - அமெரிக்காவில் இப்படி ஒரு ட்ரென்ட்!

By YS TEAM TAMIL|7th Apr 2021
பிரபல நைக் நிறுவனம் கடும் எதிர்ப்பு!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், பிளாஸ்டிக், மை என பல பொருட்களை கொண்டு ஷூ தயாரிப்புகள் வெளியாகி இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், மனித ரத்தம் கலந்து ஷூ தயாரிக்கப்பட்டிருப்பது தான் இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட் மட்டுமல்ல, பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.


இப்படி பிரச்சனைக்குக் காரணமாக அமைந்திருப்பது எம் எஸ் சி ஹெச் எஃப் என்கிற ப்ரூக்ளினைச் சேர்ந்த கலைப் பொருட்களை சேகரிக்கும் அமைப்புதான். இந்த அமைப்பு, பிரபல விளையாட்டு ஆடை மற்றும் காலணிகளை தயாரிக்கும் நைக் நிறுவனத்தின் ஏர் மேக்ஸ் 97 எஸ் ரக ஷூவில், ஒரு துளி மனித ரத்தம் உள்ளிட்ட சில மாற்றங்களை செய்து '666 ஜோடி ஷூ' என வெளியிட்டது.

இதனுடன் ஷூவில் தலைகீழான சிலுவைச் சின்னம், பென்டாகிராம் எனப்படும் நட்சத்திரக் குறி, லூக்கா 10:18 என்கிற சொல் போன்றவைகள் இடம் பெற்றுள்ளன. இந்த லூக்கா 10:18 குறிப்பானது, “சாத்தான் வானத்திலிருந்து மின்னலைப் போல விழுவதை நான் பார்த்தேன்” என்ற பைபிளின் வசனத்தைக் குறிப்பிடுகிறது.
shoe

பிரபல ராப் பாடகர் லில் நாஸ் எக்ஸ் உடன் இணைந்து இந்த அமைப்பு இந்த ஷூவை வெளியிட்டுள்ளது. அமெரிக்க மதிப்பில் 1,018 டாலர் என்ற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஷூ-வானது ஒரு நிமிடத்துக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


எம்எஸ்சிஹெச்எஃப், அடுத்த நிறுவனத்தின் பிராண்டுகளை மறு வடிவமைப்பு செய்வது ஒன்றும் புதிது கிடையாது. இதற்கும் முன்பும் இதுபோல் செய்துள்ளது. இதற்கு முன்பும், ‘ஜீசஸ் ஷூஸ்’ என்ற மாற்றியமைக்கப்பட்ட நைக் ஏர் மேக்ஸ் 97 காலணிகளை ஜோர்டான் நதியில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீருடன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


இந்தநிலையில், இந்த விற்பனைக்கு எதிராக அந்த அமைப்பு மீது Nike கம்பெனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. பதிப்புரிமை மீறல் என்றும், அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில், mschf அமைப்பின் ஷூக்களை விற்பதைத் தடுக்க வேண்டும் என்றும் இந்த வழக்கைத் தொடுத்துள்ளது.


அதேபோல், தங்கள் நிறுவனத்தின் லோகோவையும் பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

மனித ரத்தத்தை கலந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஷூவை சாத்தானின் ஷூ என்றும், அதை தங்கள் நிறுவனம் அங்கீகரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
shoe

இது தொடர்பாக பேசியுள்ள அந்நிறுவனம்,

mschf-ன் சாத்தான் ஷூக்கள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். எங்கள் நிறுவனமும், அந்த அமைப்பும் இணைந்து செயல்படுவது போல மக்கள் மத்தியில் ஒரு தவறான புரிதலை அது உண்டாக்கும்," எனவும் கூறியிருந்தது.

நைக் நிறுவனத்தின் வழக்குக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. எனினும் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் முடிவில் நைக் நிறுவனத்துக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. அதன்படி, அந்த அமைப்பின் ஷூக்களுக்கு எதிராக ஒரு தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்தது நீதிமன்றம்.


இந்த தடை உத்தரவு அத்தனை தெளிவாக இல்லை. எனினும், எம் எஸ் சி ஹெச் எஃப் அமைப்பு, தாங்கள் இனி மேல் சாத்தான் ஷூக்களைத் தயாரிக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளது. மேலும், நைக் நிறுவனத்திடம் அந்த அமைப்பு சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.


தொகுப்பு: மலையரசு