Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

கட்டுமான உபகரணங்களுக்கான 'அனைத்து பெண்கள் சேவை மையம்' சென்னையில் துவங்கிய Schwing Stetter நிறுவனம்!

முன்னணி கட்டுமானம் மற்றும் கட்டுமான உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் ஸ்விங் ஸ்டெட்டர் இந்தியா சென்னையில் அனைத்து பெண்கள் சேவை மையத்தை அமைத்துள்ளது. இதற்காக, 17 பெண்கள் கொண்ட இந்த குழு பணியமர்த்தப்பட்டுள்ளது.

கட்டுமான உபகரணங்களுக்கான 'அனைத்து பெண்கள் சேவை மையம்' சென்னையில் துவங்கிய Schwing Stetter நிறுவனம்!

Friday September 27, 2024 , 1 min Read

முன்னணி கட்டுமானம் மற்றும் கட்டுமான உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் ஸ்விங் ஸ்டெட்டர் இந்தியா (Schwing Stetter India), சென்னை அருகே பூந்தமல்லியில் அனைத்து பெண்கள் சேவை மையத்தை அமைத்துள்ளது.

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரக அதிகாரி மிக்கேலா குச்லர் துவக்கி வைத்த இந்த மையம், பாலினம் சார்த வழக்கமான பணி பொறுப்புகளை மாற்றி அமைத்து, இத்துறையில் நுழைய விரும்பும் பெண்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியில்; அமைந்துள்ள இந்த மையம், 20 முதல் 25 வயதான திறன் வாய்ந்த பெண் தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டிருக்கிறது. பல வகையான கான்கிரீட் பம்ப்கள், மிக்சர் உள்ளிட்டவை தொடர்பான சேவை அளிக்கும் திறன் பெற்றவர்களாக 17 பெண்கள் கொண்ட இந்த குழு விளங்குகிறது.

tn
“உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறையில், பெண்களின் ஆற்றல் மற்றும் திறன் மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளமாக இந்த அனைத்து மகளிர் சேவை மையம் அமைகிறது. வழக்கமான வார்ப்புகளை உடைத்தெறிவதோடு, பெண்களின் திறனை பயன்படுத்திக்கொண்டு சமத்துவம் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதில் பெருமை கொள்கிறோம்,” என நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயகுனர் வி.ஜி.சக்திகுமார் கூறினார்.

பல்வேறு பிரிவுகளில் எங்கள் பணியாளர்களில் 50 சதவீத பெண்களை பணிக்கு அமர்த்தும் நோக்கம் கொண்டுள்ளோம். இந்தியாவின் அடுத்த தலைமுறை பெண் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவது, இந்தியாவின் உள்கட்டமைப்பு பரப்பை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும், என்றும் கூறினார்.

schwing stetter

அனைத்து பெண்கள் சேவை மையம், பாதுகாப்பான பணியிடத்தை முன்னிறுத்துவதோடு, தேவையான பாதுகாப்பு சாதனங்களை கொண்டுள்ளது. நிறுவனம் இந்தியா முழுவதும் இதே போன்ற மையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Schwing Stetter நிறுவன பின்னணி

ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்விங் ஸ்டெட்டர் நிறுவனம் தமிழ்நாட்டில் 1999 முதல் தனது உற்பத்தி ஆலையை கொண்டுள்ளது. கான்கிரீட் தயாரிக்கும் மெஷின்கள், கான்கிரிட் பம்புகள், அதற்கான ட்ரக்குகள் மற்றும் மிக்சர்களை தயாரித்து பல பெரிய கட்டமைப்புத் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் முன்னணி நிறுவனமாகும்.


Edited by Induja Raghunathan