Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

புத்தகங்களை சுயமாக வெளியிட உதவும் நிறுவனம்!

முதலாண்டில் 20,000 ரூபாய் வருவாய் ஈட்டிய ப்ளூரோஸ் நிறுவனம் 1 மில்லியன் டாலர் வருவாயை எட்ட திட்டமிட்டுள்ளது.

புத்தகங்களை சுயமாக வெளியிட உதவும் நிறுவனம்!

Tuesday December 31, 2019 , 3 min Read

சையத் அர்ஷத் பீஹாரின் பகல்பூரில் உள்ள ஒரு சிறிய நகரில் வளர்ந்தவர். இவரது அப்பா மத்திய அரசு ஊழியர். கூட்டுறவு அதிகாரியாக இருந்தார். இவரது குடும்பத்தில் யாரும் தொழில்முனைவில் ஈடுபட்டதில்லை. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அர்ஷத்திற்கும் தொழில்முனைவில் ஈடுபடும் திட்டம் ஏதும் இருந்ததில்லை.


அர்ஷத் 2002ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஜாமியா மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடிப்பதற்காக டெல்லிக்கு மாற்றலானார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏரோனாடிக்ஸில் சேர்ந்து விமான பராமரிப்பு பொறியியல் பயின்றார்.

“ஆனால் அந்த காலகட்டத்தில் விமானத் துறையில் பணி கிடைப்பது கடினம். எனவே நான் கலெக்‌ஷன் ஏஜெண்டாக ஐபிஎம்-ல் சேர்ந்ததேன்,” என்றார்.

சில ஆண்டுகள் இந்தத் துறையில் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் நடந்தது.


அர்ஷத்திற்கு எழுதுவதில் எப்போதும் ஆர்வம் அதிகம். அதனால் அவர் கலெக்‌ஷன் ஏஜெண்டாக இருந்த சமயத்தில் If It’s Not Love என்கிற காதல் கதையை எழுதினார். இதை வெளியிடுவதற்காக வெளியீட்டாளர்களைக் கண்டறியவதில் சிக்கல்களை சந்தித்தார்.


இறுதியாக கொல்கத்தாவில் உள்ள ஒரு ஏஜென்சி மூலம் சுயமாக வெளியிட தீர்மானித்தார். அதன் பிறகு இவர் எவ்வாறு புத்தகத்தை சுயமாக வெளியிட்டார் என்பதைத் தெரிந்துகொள்ள பலர் இவரைத் தொடர்புகொண்டுள்ளனர். பலர் தங்களது புத்தகங்களை வெளியிட இவர் உதவியுள்ளார். விரைவிலேயே இதற்கான சந்தை வாய்ப்பு இருப்பதை உணர்ந்தார்.

”புத்தகம் வெளியிட்ட பிறகு பலர் இதற்கான செயல்முறையைத் தெரிந்துகொள்ள என்னைத் தொடர்பு கொண்டனர். மக்கள் இதில் ஆர்வம் காட்டுவதைக் கண்டு ஒரு பிரத்யேக நிறுவனம் தொடங்க எண்ணினேன். சந்தையில் ஆய்வு செய்து இதற்கான தேவை இருப்பதைத் தெரிந்துகொண்டேன்,” என்றார் அர்ஷத்.
1

ஸ்டார்ட் அப்

அர்ஷத் 2015-ம் ஆண்டு ‘ப்ளூரோஸ் பப்ளிஷர்ஸ்’ (BlueRose Publishers) நிறுவனத்தை டெல்லியில் தனியுரிமை நிறுவனமாகப் பதிவு செய்தார். தனிப்பட்ட சேமிப்பில் இருந்தும் வங்கிக் கடன் மூலமாகவும் 5 லட்ச ரூபாய் திரட்டி இந்த வணிகத்தில் முதலீடு செய்தார்.


நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் இரண்டு நபர்களுடன் செயல்பட்டு 20,000 ரூபாய் வருவாய் ஈட்டியது. ஆனால் ஒன்றரை ஆண்டு காலத்தில் வருவாய் 10 லட்ச ரூபாயாக அதிகரித்தது. அப்போதிருந்து டெல்லியைச் சேர்ந்த இந்நிறுவனம் நிலையாக வளர்ச்சியடைந்து வருகிறது.

2017ம் ஆண்டு 1 கோடி ரூபாயாக இருந்த இந்நிறுவனத்தின் வருவாய் 2018ம் ஆண்டில் 3 கோடி ரூபாயாகவும் 2019-ம் ஆண்டில் 7 கோடி ரூபாயாகவும் அதிகரித்தது. இன்று ப்ளூரோஸ் பப்ளிஷர்ஸ் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக 50 ஊழியர்களுடன் செயல்படுகிறது.

சில ஆயிரம் ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டிய நிறுவனம் எவ்வாறு கோடிகளில் லாபம் ஈட்டத் தொடங்கியது? மூன்று நூலாசிரியர்கள் என்கிற எண்ணிக்கையில் தொடங்கப்பட்டு 2019-ம் ஆண்டில் 1,500-ஆக அதிகரித்ததன் ரகசியம் என்ன?

“வணிகத்தை முறையாக திட்டமிடுவதுதான் முக்கியம். மற்றபடி இதில் ரகசியம் ஏதும் இல்லை,” என்று பதிலளிக்கிறார் அர்ஷத்.

புத்தகங்களை சுயமாக வெளியிடும் முறை

எழுத்தாளர் தனது படைப்பை சுயமாக வடிவமைத்து, எடிட் செய்து, அச்சிட்டு, விநியோகிக்கலாம். அல்லது கையெழுத்துப் பிரதியைக் கொண்டு கட்டண அடிப்படையில் புத்தகமாக வெளியிடும் தளத்தை அணுகலாம். ப்ளூரோஸ் போன்ற நிறுவனங்கள் பதிப்புரிமைக்கு விண்ணப்பித்தல், எடிட்டிங், வடிவமைப்பு போன்றவை தொடங்கி அமேசான் போன்ற தளங்களில் பட்டியலிடுவது வரை முழுமையான சேவைகளை வழங்குகிறது.


சென்னையைச் சேர்ந்த நோஷன் பிரெஸ், Partridge India, The Write Place போன்ற நிறுவனங்கள் புத்தகங்களை சுயமாக வெளியிடும் பிரிவில் செயல்படுகிறது. ப்ளூரோஸ் கட்டணம் மற்ற போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் மிகக்குறைவு என்கிறார் அர்ஷத்.

“நோஷன் நிறுவனத்தின் ஆரம்ப விலை 30,000 ரூபாய் எனும் நிலையில் எங்களது கட்டணம் 15,000 ரூபாய் என்கிற அளவிற்கு மிகக்குறைவு,” என்றார்.

இந்நிறுவனம் 2016ம் ஆண்டு Rashmi Trivedi எழுதிய ‘Woman, Everything Will Be Fine!’ புத்தகம் அமேசான் தளத்தில் விற்பனையில் முன்னணியில் இருந்தது. அதேபோல் இந்நிறுவனத்தின் பாரம்பரிய வெளியீட்டு தளம் மூலம் 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இவரது இரண்டாவது புத்தகம் ‘Ashes To Dreams’ அமேசான் தளத்தில் சிறப்பாக விற்பனையான முன்னணி பத்து புத்தகங்கள் பட்டியலில் இடம்பெற்றது.


”புனைவு, புனைவு அல்லாத பிரிவு, கவிதை, கல்வி, சுய முன்னேற்றம் என பல்வேறு பிரிவுகளில் எழுதும் எழுத்தாளர்கள் உள்ளனர். சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் எங்களைத் தொடர்பு கொள்கின்றனர். ஏற்கெனவே ப்ளூரோஸ் மூலம் வெளியிட்ட எழுத்தாளர்களின் பரிந்துரை மூலமாகவும் பலர் எங்களை அணுகுகின்றனர்,” என்றார் அர்ஷத்.

எதிர்காலத் திட்டம்

ப்ளூரோஸ் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் ’புத்தக லவுஞ்ச்’ ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. சோதனை முயற்சியை தலைநகரில் மேற்கொண்டு அங்கு கிடைக்கும் வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு மற்ற நகரங்களிலும் செயல்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


இந்நிறுவனம் உலகளவில் செயல்பட திட்டமிட்டிருப்பதால் அரை மில்லியன் டாலர் நிதி உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஜெர்மனியில் Omni Spectrum என்கிற வெளியீட்டு நிறுவனத்துடன் இந்நிறுவனம் ஏற்கெனவே இணைந்து செயல்படுகிறது.

”2020ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டன் புத்தக கண்காட்சியில் பங்கேற்க உள்ளோம். சில நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வணிகத்தை விரிவுபடுத்த உள்ளோம்,” என்றார் அர்ஷத்.

இந்த முயற்சியில் ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்களுடன் ப்ளூரோஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. “முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை சரியான நபர்களைத் தேர்வுசெய்யவேண்டியது அவசியம்,” என்றார்.


இந்தியாவில் புத்தக வெளியீட்டுத் துறை 8 மில்லியன் டாலர் மதிப்புடையதாக காணப்படுகிறது. 2020-ம் ஆண்டில் 10 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆங்கில கட்டுரையாளர்: ராமர்கோ செங்குப்தா | தமிழில்: ஸ்ரீவித்யா