சென்னை முதியோர் நலச்சேவை நிறுவனம் ‘அதுல்யா’ ரூ.77 கோடி நிதி திரட்டியது!
January 13, 2023, Updated on : Fri Jan 13 2023 10:04:02 GMT+0000

- +0
- +0
இந்தியாவில் முதியோருக்கான நலச்சேவை வழங்கும் 'அதுல்யா' (Athulya) தனது விரிவாக்கத்திற்காக, மார்கன் ஸ்டான்லி இன்பிராஸ்டக்ர்சர் பாட்னர்ஸால் நிர்வகிக்கப்படும் நார்த் ஹெவன் இந்தியா இன்பிராஸ்டக்சர் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.77 கோடி (US$ 9.3MM) நிதி திரட்டியுள்ளது.
2016ல் நிறுவப்பட்ட அதுல்யா (
) 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு வாழ்க்கை உதவி, டிரான்சிஷன் கேர் மற்றும் இல்ல மருத்துவ வசதிகளை வழங்கி வருகிறது. விரைவில் பேலியேட்டிவ் கேர் சேவையையும் அளிக்க உள்ளது.இதன் நிறுவனர்கள் டாக்டர்.கார்த்திக் நாராயண், ஜி.ஸ்ரீனிவாசன், கே.கிருஷ்ண காவ்யா இந்தியா மற்றும் அமெரிக்காவில் முன்னணி மருத்துவமனை நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள்.

நிறுவனம் தற்போது, சென்னை மற்றும் பெங்களூருவில் 400 படுக்கைகளை நிர்வகித்து வருகிறது. மொத்தமாக, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு சேவை அளித்துள்ளது.
தற்போதைய நிதி மூலம் இந்நிறுவனம், தென்னிந்தியாவில் 2500 படுக்கைகள் மற்றும் 50 ஆயிரம் முதியோர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் சேவை அளிக்க திட்டமிட்டுள்ளது.
குறுகிய காலம் முதல் நீண்ட கால அடிப்படையில் நலச்சேவைகளை நிறுவனம் வழங்குகிறது. வளர்ந்து வரும் துறையில் தனது சேவைகளுக்கான சர்வதேச தர நிர்ணயத்தை பெற நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
இந்தியாவில் முதியோர்களுக்கான வாழ்க்கை வீடுகளின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கு மேல் என பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது 20 ஆயிரம் இத்தகைய வீடுகளே உள்ளன.
“முதியோருக்கான உயர்தர வாழ்க்கை சேவைகளை வழங்குவதை மேலும் மேம்படுத்த மார்கன் ஸ்டான்லியுடனான இந்த கூட்டு உதவும். இந்த நிதி பல நகரங்களில் எங்கள் விரிவாக்கத்திற்கு உதவும்,” என அதுல்யா சினியர் கேர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர்.கார்த்திக் நாராயண் கூறினார்.
“அசிஸ்டட் லிவிங், முதியோர் மறுவாழ்வு மற்றும் பேலியேட்டிவ் சிகிச்சைக்கு இந்தியாவில் உள்ள தேவையை மறுக்க முடியாது. ஆரம்பம் முதல் அதுல்யா இந்த மாதிரியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி, உள்கட்டமைப்பு மேம்பாடு, நியமனம், ஆகியவற்றில் கவனம் செலுத்த உதவும்,” என்று நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஸ்ரீனிவாசன் கூறினார்.
“கோவிட்-19 பெருந்தொற்று முதியோர் நலனுக்கான சேவையின் தேவையை வலியுறுத்தியுள்ளது. இந்த பிரிவில் அதுல்யா முன்னணி வகிக்க முடியும் என நம்புகிறோம்,” என மார்கன் ஸ்டான்லி இந்தியா இன்பிராஸ்டக்சர் நிர்வாக இயக்குனர் ராஜா பார்த்தசாரதி கூறினார்.

சென்னை ஐஐடி மின் வாகன சார்ஜர் ஸ்டார்ட் அப் 'Plugzmart' ரூ.3.63 கோடி நிதி திரட்டியது!
Edited by Induja Raghunathan
- +0
- +0