அமேசான், CTS ஆஃபர்களை நிராகரித்த கடைக்காரரின் மகன்: Microsoft-ல் ரூ.50 லட்ச சம்பளத்தில் சேர முடிவு!

அமேசான், காக்னிசன்ட் போன்ற முன்னணி நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட பி.டெக் மாணவர் தகவல் தொழில்நுட்ப துறையிலேயே ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் லட்சங்களில் சம்பளத்தை வாரிக்கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது.
9 CLAPS
0

அமேசான், காக்னிசன்ட் போன்ற முன்னணி நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட பி.டெக் மாணவர் தகவல் தொழில்நுட்பத் துறையிலேயே ஜாம்பவான் நிறுவனமான Microsoft-இல் லட்சங்களில் சம்பளத்தை வாரிக்கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்கள் முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த படிப்புகளை படித்து வரும் பெரும்பாலான இளைஞர்களின் கனவு, மைக்ரோசாஃப்ட், அமேசான், ஆப்பிள், கூகுள் போன்ற டாப் பிராண்ட் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதாக தான் இருக்கும். அப்படி சில பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே பன்னாட்டு நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் சம்பளத்துடன் பணிக்கு அமர்கின்றனர்.

தற்போது முன்னணி நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், கடினமாக முயன்று பெற்றோரை பெருமைப்படுத்தியிருக்கிறார்.

அடுத்தடுத்து தோல்வி:

ஹரியானா மாநிலம் அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த மதுர் ரகேஜா சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை கடை ஒன்றை நடத்தி வருகிறார், தாய் குடும்பத்தை கவனித்து வருகிறார்.

மதுர் ஒரு பி.டெக் மாணவர். தற்போது அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் சம்பள வேலை வாய்ப்பை பெற்று அசத்தியுள்ளார்.

மதுர் ரகேஜா UPES ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸில் ஆயில் மற்றும் கேஸ் தொடர்பான கணினி துறையில் B.Tech பட்டம் பெற்றுள்ளார். பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர்,

"தொழில்நுட்பம் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய வகையில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்ய நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். மேலும் இது போன்ற மிகப்பெரிய விஷயங்களில் நான் எப்போதும் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன்,” என்றுள்ளார்.

எனவே, மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்ற முடிவெடுத்த ரகேஜா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தேர்வு முறையையும் கற்றுத் தேர்ந்து, வேலை வாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்க தயாராக இருந்தார்.

பி.டெக் பட்டத்தை கையில் வாங்கிய மதுர், அமேசான், DE Shaw, Optum, Cognizant, Infosys உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கும் விண்ணப்பித்துள்ளார். இறுதியாக அமேசான் நிறுவனத்தில் அவருக்கு SDE என்ற ரோல் கிடைத்தது. ஆனால் அதனை விட சம்பளம் உள்ளிட்ட பல நன்மைகள் அதிகமிருந்ததால், அவர் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர உள்ளார்.

மதுர் விரைவில் பெங்களூரில் உள்ள மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் சேரவுள்ளார். ஏனெனில் மதுருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ரூ.50 லட்சம் சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து, அதன் மூலமாக கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு சிறந்த மென்பொருள் உருவாக்குநராக மாற வேண்டும் என்பதே மதுரின் கனவாகும்.

தகவல் உதவி: Money Control | தொகுப்பு: கனிமொழி