Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

இளம் வயதில் கணவரை இழந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உதவும் தாய்!

சிஃபியா ஹனீஃப் 20 வயதில் கணவரை இழந்தபோதும் தொடர்ந்து படிப்பை முடித்து வருவாய் ஈட்டி தன்னைச் சுற்றியுள்ள மக்களின் நலனில் பங்களித்து வருகிறார்.

இளம் வயதில் கணவரை இழந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உதவும் தாய்!

Monday February 17, 2020 , 3 min Read

சிஃபியா ஹனீஃப்பிற்கு 15 வயது இருக்கும். வேடிக்கை, விளையாட்டு என வாழ்க்கையை ரசித்துக்கொண்டிருக்கும் வயதில் இவருக்கு திருமணம் முடித்துவைக்கப்பட்டது. மெல்ல ஒரு வீட்டை முறையாக நிர்வகிப்பது குறித்த புரிதல் ஏற்படத் தொடங்கியது. பொறுப்புகளைச் சுமந்து புதிய வாழ்க்கையைத் துவங்க இருந்த சமயத்தில் இவரது கணவர் உயிரிழந்தார்.

‘‘என் கணவரின் இழப்பை எதிர்கொள்ள முடியாமல் தவித்தேன். உலகமே நொறுங்கிப் போனது. பணத் தேவையை சமாளிப்பது, தனியாக முடிவெடுப்பது என அனைத்துமே கடினமாக இருந்தது. என் குழந்தைகளை தனியாக வளர்ப்பது குறித்த கவலையில் எப்போதும் ஆழ்ந்திருந்தேன்,” என்று பகிர்ந்துகொண்டார் தற்போது 31 வயதாகும் சிஃபியா.
1

இத்தனை பிரச்சனைகளுக்கிடையிலும் சிஃபியா நம்பிக்கை இழக்கவில்லை. பெற்றோர்கள் தங்களுடன் வசிக்க வற்புறுத்தினர். மறுமணம் குறித்த பேச்சுக்களும் எழுந்தது. ஆனால் சிஃபியா கணவனை இழந்தவர்கள் நடத்தப்படும் விதம் மாறவேண்டும் என்பதற்காகவும் தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் படிக்கத் தீர்மானித்தார்.

சிஃபியாவின் முயற்சி சுய மேம்பாட்டிற்கும் குடும்ப நலனிற்கும் உதவியதுடன். விளிம்புநிலை மக்களின் குறைகளைத் தீர்க்கவும் உதவியது.

நோய்வாய்பட்ட தாய்மார்கள், முதியவர்கள், கணவனை இழந்தவர்கள், புற்றுநோய் பாதித்தவர்கள் போன்றோருக்கு உதவும் நோக்கத்துடன் இவர் 2015ம் ஆண்டு சித்தல் (Chithal) என்கிற அறக்கட்டளையை நிறுவினார். கடந்த ஆறாண்டுகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவு, உடை, மருந்துகள் போன்றவற்றை வழங்கி உதவியுள்ளார்.

சமீபத்தில் சிஃபியாவின் உன்னத சேவையைப் பாராட்டி அவருக்கு நீரஜா பனோட் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

திருப்புமுனை

பனை மரங்கள், பசுமையான நிலப்பரப்புகள், மலைகள் நிறைந்த பாலக்காடு பகுதியில் உள்ள வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் சிஃபியா. இவரது அப்பா சவுதி அராபியாவில் பணிபுரிந்தார். அரிதாகவே வீட்டிற்கு வருவார்.


சிஃபியா சேருபுஷ்பம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்தபோது அவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.

”என் கிராமத்தில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படுவது வழக்கம். எனவே எனக்கு இதில் விருப்பமில்லாதபோதும் நான் அதை ஏற்றுக்கொண்டேன்,” என்றார்.

துரதிர்ஷ்ட்டவசமாக ஐந்தாண்டுகளில் சிஃபியாவின் கணவர் ஒரு விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் பணிபுரியவில்லை. எனவே தனது குழந்தைகளைக் காப்பாற்ற படிப்பை முடித்து வேலை தேடவேண்டும் என்று தீர்மானித்தார்.


”பெங்களூருவில் இருந்த என் நண்பர்கள் எனக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தனர். ஆனால் நான் அங்கு சென்றபோது யாரும் உதவ முன்வரவில்லை. செய்வதறியாமல் இரண்டு நாட்கள் ரயில் நிலையத்திலேயே கழித்தேன். அப்போது என் இளைய மகனுக்கு ஒரு வயது. அவனுக்கு காய்ச்சல் இருந்தது. நான் நம்பிக்கை இழந்து போயிருந்த சமயத்தில் வயது முதிர்ந்த பெண் ஒருவர் என் நிலையைக் கண்டு உதவ முன்வந்தார்.

‘‘அவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று எனக்கும் என் குழந்தைகளுக்கும் உணவளித்தார். சில நாட்கள் தங்குவதற்கு இடமும் அளித்தார். அன்று அவர் பெருந்தன்மையுடன் எனக்கு உதவாமல் போயிருந்தால் என்னுடைய நிலையைக் கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை,” என்று சிஃபியா நினைவுகூர்ந்தார்.
2

அந்த சமயத்தில் சிஃபியாவிற்கு கேரளாவில் ஒரு கால் செண்டரில் வேலை கிடைத்தது. பணியில் இருந்தவாறே அஞ்சல்வழியில் 11ம் வகுப்பும் 12ம் வகுப்பும் படிக்கத் தொடங்கினார். காலிகட் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் இளநிலை பட்டம் பெற்றார். எழுத்தச்சன் பயிற்சி கல்லூரியில் பி.எட் முடித்தார். தொலைதூரக் கல்வி மூலம் பொது நிர்வாகத்தில் டிப்ளமோ மற்றும் MSW என பல்வேறு பட்டங்கள் வாங்கினார்.


சிஃபியா இன்ஷூரன்ஸ் பாலிசி விற்பனை, பயிற்சி வகுப்புகள் எடுப்பது என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். இதனால் தனது கல்விக்காக மட்டுமின்றி தன்னுடைய குழந்தைகளின் பள்ளிப்படிப்பிற்கும் பணம் திரட்ட முடிந்தது. இவர் தற்போது ஆரம்பப் பள்ளி ஒன்றில் முழுநேர ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். எனினும் இவர் தன்னுடைய கனவுகளை நனவாக்கிக் கொள்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் மற்றவர்களுக்கும் உதவி வருகிறார்.

நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளார்

2013ம் ஆண்டு இறுதியில் சிஃபியா தனது கிராமத்தில் உள்ள கணவனை இழந்த பெண்கள் பலரை சந்தித்தார். அவரது சொந்த வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் அவர் நினைவிற்கு வந்தது. அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஏதோ ஒரு வகையில் உதவவேண்டும் என்று விரும்பினார். எனவே சிஃபியா தனது சம்பளத்தின் ஒரு பகுதியை உதவி தேவைப்பட்ட சுமார் ஐந்து குடும்பங்களுக்காக ஒதுக்கினார்.


பின்னர் தனது முயற்சிகளை விரிவாக்கம் செய்தார். நோயாளி அம்மாக்கள், குழந்தைகள், முதியவர்கள், புற்றுநோயாளிகள் என அனைவருக்கும் உதவத் தொடங்கினார். இத்தகைய பணிகளில் தொடர்ந்து ஈடுபடும் நோக்கத்துடன் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ’சித்தல்’ (Chithal) என்கிற அறக்கட்டளையை நிறுவத் தீர்மானித்தார்.

3
‘சித்தல்’ என்பது மலையாள வார்த்தை. ‘கரையான்கள்’ என்பதே இதன் பொருள். இந்த வார்த்தை எதிர்மறையாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் அப்படியில்லை. நாம் எதிர்பார்க்காத நேரத்தில் எவ்வாறு கரையான்கள் தோன்றுகிறதோ அதேபோன்று துயரத்தில் இருப்பவர்களின் துயரங்களைத் தீர்க்க விரும்புகிறேன்,” என்று சிஃபியா விவரித்தார்.

இன்று தேவையிருப்போருக்குக் உணவு, உடை, மருந்துகள் போன்றவற்றை வாங்குவதற்காக நிதி திரட்ட சமூக வலைதளங்களையும் கூட்டுநிதி தளங்களையும் பயன்படுத்தி வருகிறார்.


ஆங்கில கட்டுரையாளர்: கிருஷ்ணா ரெட்டி | தமிழில்: ஸ்ரீவித்யா