60 வயதிலும் நள்ளிரவு எழுந்து முதியவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கும் வினயா பாய்!

By YS TEAM TAMIL|11th Sep 2020
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கேரளாவைச் சேர்ந்த 60 வயதான வங்கி ஊழியர் வினயா பாய், தினமும் அதிகாலை 2 மணிக்கு மேல் சுமார் 50 முதியவர்களுக்கு உணவு தயாரித்து கொடுத்து வருகிறார். வயதான நோயாளிகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி டயட் உடன் கூடிய உணவை தயாரித்துக் கொடுக்கிறார்.


ஒரு கட்டத்தில் இந்த சேவையை தொடர, தனது வங்கி வேலையை விட்டார் வினயா. இவர் இதுவரை பத்தாயிரம் ஏழை மக்களுக்கு அப்பளம்-சிப்ஸ் தயாரிக்கவும், அவர்களின் சொந்த கால்களில் நிற்கவும் பயிற்சி அளித்துள்ளார். வினயா இந்த வயதிலும் கூட முற்றிலும் ஆரோக்கியமாக உணர்கிறார்.


கேரளா திருச்சூரைச் சேர்ந்த வினயா பாய், ஆஸ்துமா, மூட்டு வலி, செரிமான பிரச்சினைகள் உள்ளவ முதியவர்களுக்கு சேவை செய்கிறார். அவர் அந்தந்த முதியோர்களின் தேவைகளை நன்கு அறிந்து செயல்படுகிறார். வயதானவர்களுக்கு சரியானபடி உணவு தயாரிக்க, பட்டியல் ஒன்றையும் தயாரித்து வைத்துள்ளார் வினயா. இந்த சார்ட்டின் அடிப்படையில் தினசரி உணவுவகைகளும் மாறுபடும்.


வினயா தனது வாடிக்கையாளர்களுடன் தினமும் பேசி கலந்தாலோசித்து அவர்களுக்குப் பிடித்த, ஏற்ற பட்டியலை தயாரித்து வைத்துக் கொள்கிறார். 60 வயதான வினயா தனது பகுதியில் உள்ள பெரியவர்களையும் நோயாளிகளையும் அன்போடு கவனித்து கொள்கிறார். 


50 பேருக்கு காலை உணவு தயாரிக்க அவர் தினமும் அதிகாலை 2 மணிக்கு எழுகிறார். இது மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு ஆதரவாக மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். நோயாளிகளின், வயதானவர்களின் உணவை மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே அவர் உணவு தயார் செய்கிறார்.

"என் மனமும் உடலும் நன்றாக இருக்கிறது. இப்போது நான் செய்ய வேண்டியது என்னவென்றால், எனது சமையலை மக்களுக்கு என்னால் முடிந்தவரை தொடர்ந்து வழங்க வேண்டும். என்னுடைய  இரண்டு உதவியாளர்களும் உணவைத் தயாரிக்க எனக்கு உதவுகிறார்கள். வேலைக்காக தினமும் அதிகாலையில் எழுந்திருப்பது எனக்கு பெரிய விஷயமல்ல,” என்கிறார் வினயா.

காலை 7.30 முதல் 8 மணி வரை அவர் காலை உணவைத் தயாரிக்கிறார். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அவரின் வீட்டிலிருந்து நேரடியாக உணவை பெற்றுக்கொள்கிறார்கள். அவர் வீட்டுக்கு வந்து எடுத்துச் செல்ல முடியாதவர்களுக்கு, அவர் வீட்டுக்கு நேரடியாக சென்று விநியோகிக்கிறார் வினயா குழுவினர்.

கேரளா சிப்ஸ்

இலவசமாகக் கிடைக்கக்கூடிய எதுவும் முக்கியமில்லை என்று வினயா நம்புவதால், உணவுக்கான விலையையும் அவர் குறைந்தபட்சமாக வைத்திருக்கிறார். அதிகமோ அல்லது குறைவோ, வினயா பாயின் நாள் நடு இரவு 2 மணியில் இருந்து தொடங்குகிறது.


வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கான சத்தான உணவில் மசாலாப் பொருட்களின் கலவையை மருத்துவரின் அறிவுறுத்தலின் படி வினயா கவனித்து வருகிறார். வீட்டு விநியோகத்திற்காக அவர் டெலிவரி கட்டணம் மட்டும் வசூலிக்கிறார்.


தனது சொந்தத்தில் கொடுங்கல்லரில் (கேரளா) ஒரு ஹோட்டல் இருந்ததாக வினயா கூறுகிறார். ஒரு ஹோட்டல் சமையலறையில் எப்படி சமைக்க வேண்டும் என்று அங்கு கற்றுக்கொண்ட பிறகே, தான் விட்டில் அதிக பேருக்கு உணவு தயாரிக்க முடிகிறது என்கிறார்.


தானும் ஒரு ஹோட்டல் தொடங்க கனவு கண்டதாக கூறும் வினயா, இருபத்தி ஆறு வயதிருக்கையில், வங்கி வேலையுடன் அப்பளம் & சிப்ஸ் தொழில் செய்யத் தொடங்கினார். பாகற்காய், பலாப்பழம், வாழைப்பழம், கேரட் போன்றவற்றினால் செய்யப்பட்ட சிப்ஸ்கள் தயாரித்து சுற்றியுள்ள கிராமங்களில் விற்றுள்ளார்.


அவர் உணவுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கியதும், வங்கி வேலையை ஒட்டுமொத்தமாக விட்டுவிட்டார். அதன் பிறகு அவர் குறைந்து படித்த மற்றும் ஏழை மக்களுக்கு அப்பளம் மற்றும் சிப்ஸ்கள் செய்ய கற்றுக் கொடுத்தார். இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் பேரை ஊக்கப்படுத்தி, அவர்களை சிறு தொழில்முனைவர்களாய் ஆக்கிய பெருமையும் வினயா பாயைச் சேரும்.


தகவல்: யுவர்ஸ்டோரி ஹிந்தி