ஸ்மார்ட்போன் உதிரி பாகங்கள் பிராண்ட் உருவாக்கி ரூ.25 கோடி டர்ன்ஓவர் செய்த அமீன்!

ப்ளூடூத் ஹெட்செட், ஸ்மார்ட்வாட்ச், ப்ளூடூத் ஸ்பீக்கர், போன்ற பல பொருட்களை தயாரித்து, விற்கும் இவரது இ-காமர்ஸ் தளம் நாள் ஒன்றிற்கு 5,000 ஆர்டர்கள் பெறுகிறது.

15th Jul 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கடின உழைப்புதான் வெற்றிக்கு முக்கியம். ஒவ்வொரு தொழில்முனைவரின் வெற்றிக்கும் பின்னும் மன உறுதி, விடாமுயற்சி, சவால்களை எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை போன்றவை நிறைந்திருக்கும்.


அத்தகைய தொழில்முனைவோர்களில் ஒருவர்தான் அமீன் க்வாஜா. இவர் ஒரு பிராண்டை ஆரம்பகட்டத்தில் இருந்து உருவாக்கியுள்ளார்.

1

அமீன்; ஒரு மின் பொறியாளர். இவர் தனக்குக் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். எஸ்எம்பிஸ்டோரி உடனான உரையாடலில் அவர் கூறும்போது,

“நான் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தேன். அங்கு படித்துக்கொண்டிருந்தபோது பக்கிங்கம் பேலஸ் அருகே உள்ள சுமார் 70 உணவகங்களுக்கு வலைதளம் உருவாக்குவம் பணியில் பகுதி நேரமாக ஈடுபட்டேன்,” என்றார்.

2005-ம் ஆண்டு அமீன் இந்தியா திரும்பினார். பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணியாற்றினார். எனினும் அவரது பணி வாழ்க்கை திருப்தி அளிக்கவில்லை.


2000-ம் ஆண்டின் மத்தியில் ஸ்மாட்போன் துறை அபார வளர்ச்சியை சந்தித்தது. அதேபோல் ஸ்மார்ட்போன் சார்ந்த உதிரிப் பாகங்கள் பிரிவும் சிறப்பாக வளர்ச்சியடைந்தது. இந்தத் துறையில் செயல்பட்டால் வளர்ச்சிக்கான சாத்தியம் அதிகம் இருப்பதை அமீன் உணர்ந்தார்.


2015-ம் ஆண்டு ஸ்மார்ட்போன் சார்ந்த உதிரி பாகங்கள் விற்பனைக்காக சொந்தமாக மின்வணிக வலைதளத்தை உருவாக்கினார். இ-காமர்ஸ் வலைதளம் தொடங்குதல், ஸ்மார்ட்போன் சார்ந்த உதிரி பாகங்கள் விற்பனை, பிராண்ட் உருவாக்குதல் என அமீன் பல்வேறு கடினமான சூழல்களை எதிர்கொண்டே இந்த நிலையை எட்டியுள்ளார்.

பிராண்ட் உருவாக்கினார்

ஆரம்பத்தில் அமீன், பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து மின்வணிக தளத்தில் விற்பனை செய்து வந்தார். இந்தியாவில் ஸ்மார்ட்போன் சார்ந்த உதிரி பாகங்கள் சந்தையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை அவர் விரைவிலேயே உணர்ந்தார்.

“90-களில் கம்யூட்டர் உதிரி பாகங்கள் தேவை அதிகரித்தது போன்றே 2010ம் ஆண்டிற்குப் பின்னர் ஸ்மார்ட்போன் சார்ந்த உதிரிப் பாகங்கள் தேவையும் அதிகரித்தது. அதற்கு முன்பு மக்கள் சந்தையில் கிடைப்பதை வாங்கிக் கொண்டனர். ஆனால் பெரிய பிராண்டுகள் அறிமுகமாகி மிகப்பெரிய சந்தையை உருவாக்கியதால் மக்கள் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகளும் அதிகரித்தன. சந்தையில் தேவை அதிகமிருந்தாலும் முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை. எனவே பல வகையான தயாரிப்புகளுடன் சந்தையில் செயல்படத் தொடங்கினோம்,” என்றார்.
2

2015ம் ஆண்டு அமீன், pTron என்கிற பிராண்டை அறிமுகப்படுத்தினார். நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் சார்ந்த உதிரி பாகங்கள் விற்பனைக்காக இந்த பிராண்ட் உருவாக்கப்பட்டது.

ப்ளூடூத் ஹெட்செட், TWS பிராடக்ட்ஸ், ஸ்மார்ட்வாட்ச், போர்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர், நெட்வொர்க் பிராடக்ட்ஸ் போன்ற பல்வேறு நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்களை இந்த பிராண்ட் வழங்குகிறது. கடந்த காலாண்டில் pTron 25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

pTron தயாரிப்புகள் சீனாவில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது. அனைத்துத் தயாரிப்புகளும் இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ள தொழிற்சாலையில் ஒன்றாக தொகுக்கப்படுகிறது.

மின்வணிக ஜாம்பவான்களுடன் போட்டி

pTron தயாரிப்புகள் latestone.com மூலம் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு, வெறும் மூன்றாண்டுகளிலேயே 220 கோடி மதிப்புடையதாக வளர்ச்சியடைந்தது. அமீன் கூறும்போது,

“எங்கள் வணிக வளர்ச்சிக்கு வெளியில் இருந்து நிதி திரட்டவில்லை. ஃபேஸ்புக், டிஜிட்டல் மார்கெட்டிங் ஆகியவையே விற்பனையை ஊக்குவித்தது. கையகப்படுத்தல் செலவு மிகவும் குறைவு. நாள் ஒன்றிற்கு 450 ஆர்டர்கள் எங்களுக்குக் கிடைத்தது,” என்றார்.

எனினும் இரண்டு ஆண்டுகளில் நிறுவனம் சிக்கல்களை சந்தித்தது. ஃபேஸ்புக் மார்கெட்டிங் கட்டணத்தை அதிகரித்தது. மிகப்பெரிய அளவில் செயல்படும் மின்வணிக ஜாம்பவான்கள் சந்தையில் அறிமுகமானார்கள். இவர்களுடன் போட்டியிடுவது கடினமாக இருந்தது.

“நாங்கள் சந்தையில் சிறப்பாக செயல்பட்டாலும் எங்கள் வணிகத்தை விளம்பரப்படுத்த பல கோடி ரூபாய் செலவிட்ட மிகப்பெரிய மின்வணிக நிறுவனங்களை வெல்ல முடியவில்லை,” என்று தெரிவித்தார் அமீன்.
3

ஆனால் அவர் நம்பிக்கை இழந்துவிடவில்லை. அதே மின்வணிக ஜாம்பவன்களைக் கொண்டு தனது வணிகத்தை அபார வளர்ச்சியடையச் செய்தார்.


அமீன் 2017ம் ஆண்டு அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல் உள்ளிட்ட பல்வேறு இ-காமர்ஸ் தளங்களில் pTron பிராண்டை பட்டியலிட்டார். விரைவில் pTron வாடிக்கையாளரின் விருப்பமான பிராண்டாக மாறியது. இன்று இந்த பிராண்ட் நாள் ஒன்றிற்கு 5,000 ஆர்டர்கள் பெறுகிறது. இதன் bassbuds வயர்லெஸ் ஹெட்செட் சிறப்பாக விற்பனையாகிறது.

கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள தாக்கம்

சவால்கள், கடும் போட்டி, போராட்டங்கள் போன்ற எதுவும் அமீனின் நோக்கத்திற்குத் தடையாக இருக்கவில்லை. கோவிட்-19 பரவலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.


அனைத்து வணிகங்களையும் கோவிட்-19 பெருந்தொற்று பாதித்திருக்கும் நிலையில் pTron விற்பனை இரண்டு மாதங்கள் பூஜ்ஜியமாகவே இருந்தது. அமீன் சுயசார்புடன் செயல்படும் நோக்கத்துடன் தயாரிப்புப் பணிகளின் ஒரு பகுதியை இந்தியாவிற்கு மாற்றத் தீர்மானித்தார். அவர் கூறும்போது,

“சிறப்பாக விற்பனையாகும் எங்களது bassbuds வயர்லெஸ் ஹெட்செட் தயாரிப்பை இந்தியாவிலேயே மேற்கொள்ளத் தீர்மானித்தோம். இதற்கான செலவுகள் அதிகரித்தபோதும் சுயசார்புடன் செயல்படுவதற்கு இதுவே சரியான தருணம்,” என்றார் அமீன்.

தயாரிப்பாளர்களுக்கு மானியம், கட்டமைப்பு வசதி போன்றவை கிடைக்கும் பட்சத்தில் PCB, Moulds போன்ற குறிப்பிட்ட தயாரிப்புகளை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்கிறார்.

அடுத்தகட்ட செயல்பாடுகள்

pTron ஒரு மாதத்தில் 1.5 lakh pieces விற்பனை செய்து மைல்கல்லை எட்டியுள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்றாண்டுகளில் ஆண்டிற்கு ஆறு மில்லியன் என்கிற இலக்கை எட்டிவிடுவோம் என்று அமீன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.


இந்நிறுவனம் அதன் SKUக்களை 225-ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் தயாரிக்கும் பணிகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் அதன் ஆர்&டி செயல்பாடுகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.  


ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India