450 வகையான விதை நெல்களை பாதுகாத்துள்ள மென்பொருள் ஊழியர்!

இயற்கையான சூழலில் பயிர்கள் சிறப்பாக வளரும் என்பதையும் பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடுதல் ரசாயனங்கள் தேவையில்லை என்பதையும் பாபாராவ் தனது ஆய்வின்மூலம் உணர்ந்தார்.

12th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இந்தியாவில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறை பெரும்பாலானோருக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள எழுபது சதவீதத்தினர் விவசாயத்தையே சார்ந்துள்ளனர்.


விவசாயத் துறைக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் இருப்பினும் விவசாய முறைகளை நடைமுறைப்படுத்துவது முதல் பயிர் உற்பத்தி மேலாண்மை வரை துறையில் பல்வேறு சிக்கல்களும் இருந்து வருகிறது.


கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். இவற்றை எதிர்கொள்ள புதிய தீர்வுகள் அவசியமாகிறது. மென்பொருள் பொறியாளராக இருந்தவர் பாபாராவ் அதோடா. இவர் விவசாயியாக மாறிவிட்டார். ஹைதராபாத்தில் இருந்து அதோடா பகுதிக்கு மாற்றலாகியுள்ள இவர் புதிய விவசாய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ரசாயனங்கள் போன்றவை கலக்கப்படாமல் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்யப்பட்டு சிறப்பாக உற்பத்தி செய்யமுடியும்.

1

இவர் உள்நாட்டு விதைகளை பாதுகாக்க விதை வங்கி உருவாக்கவும் அதோடா கிராவாசிகள் உதவுகின்றனர். பாபாராவ் இதுவரை குலாகர், கருப்பு அரிசி உள்ளிட்ட 450 வகையான நெல் விதைகளை பாதுகாத்துள்ளதாக Eenadu தெரிவிக்கிறது.


இயற்கையான சூழலில் பயிர்கள் சிறப்பாக வளரும் என்பதையும் பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடுதல் ரசாயனங்கள் தேவையில்லை என்பதையும் பாபாராவ் தனது ஆய்வின்மூலம் உணர்ந்தார். அத்துடன் மண்புழுக்களின் உதவியுடன் இவரது பயிர் வளர்ச்சி சிறப்பாக இருந்ததுடன் நீர் அட்டவணையும் மேம்பட்டது. ரசாயனங்கள் பயன்பாட்டுடன் மேற்கொள்ளப்படும் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் உற்பத்தி அளவிற்கு இணையாக இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தியைப் பெறுவதற்கு சிறிது காலம் எடுத்துக்கொண்டது.


அதுமட்டுமின்றி இவர் உணவுப் பழக்கத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறார். மக்கள் ஆயுர்வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடி தங்களது உடலமைப்பின் தேவைக்கு ஏற்றபடி உணவு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் நன்மைகளையும் தானியங்கள் மற்றும் இதர பாரம்பரிய உணவு வகைகளுக்கு திரும்பவேண்டியதன் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு பாபாராவ் முக்கியத்துவம் அளிக்கிறார்.

2

இந்த விதைகளில் புரதம், ஸ்டார்ச், எண்ணெய் ஆகியவை அதிகளவில் இருப்பதால் செடிகளின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு துணைபுரியும் என்பதே இவரது நம்பிக்கை. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இவரைத் தொடர்பு கொண்டு பாரம்பரிய விவசாய நடைமுறைகள் குறித்து தெரிந்துகொள்கின்றனர்.

“ஆரோக்கியமான வாழ்க்கையே சிறந்த செல்வம். உணவே மருந்து,” என்று அவர் குறிப்பிட்டதாக Efforts for Good தெரிவித்துள்ளது.

கட்டுரை: THINK CHANGE INDIA

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India