நியூஸ் வியூஸ்

Spicejet நிறுவன காலாண்டு லாபம் ரூ.261.7 கோடி!

YS TEAM TAMIL
14th Aug 2019
4+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

குறைந்த கட்டண விமானச் சேவை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், 2019 ஜூலை முடிந்த காலாண்டில் ரூ.261.7 கோடி லாபம் மற்றும் ரூ.3,145.3 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.


கடந்த ஆண்டின் இணையான காலாண்டில், நிறுவனம் 38.1 கோடி நஷ்டம் மற்றும் ரூ.2,253.2 கோடி வருவாய் ஈட்டியது. செயல்பாடு வருவாய், முந்தைய ஆண்டின் இணையான காலாண்டு ஈட்டப்பட்ட ரூ.2,220.4 கோடிக்கு எதிராக ரூ.3,003.1 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவன லாபம் ரூ.747.5 கோடியாக உள்ளது, முந்தையை இணையான காலாண்டில் இது ரூ.100,5 கோடியாக இருந்தது.

Spicejet

ஏப்ரல் 1 முதல் நிறுவனம் புதிய தணிக்கை முறையான இந்த் ஏ.எஸ் 116 பின்பற்றி வருகிறது. இதன் காரணமாக செயல் குத்தகையை திறம்பட பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. இதன் பயனாக, ஜூன் வரையான காலாண்டில், குத்தகை வாடகை வட்டியாக, தேய்மானமாக காட்டப்பட்டுள்ளது. இந்த முறையின் முன் தேதியிட்ட செயலாக்கம் காரணமாக, தக்கவைக்கப்பட்ட செய்யப்பட்ட வருவாய் நிலையில் ரூ.302.2 கோடி குறைந்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நல்ல வளர்ச்சி கண்டு வருவதாகவும், இந்த காலாண்டு அருமையாக அமைந்துள்ளது என்றும் நிறுவன தலைவர் அஜய் சிங் கூறியுள்ளார். சிக்கலுக்கு உள்ளாகி இருக்கும் துறையில் வேகமான விரிவாக்கத்தில் ஈடுபட்டு 32 விமானங்களை இணைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பி737 மேக்ஸ் விமான தரையிறக்கம் காரணமாக இந்த காலாண்டில் நிறுவன செயல்பாடுகள் அழுத்தத்திற்கு உள்ளாயின. நிறுவனம் மற்ற பிரிவுகளின் விமானங்களை அதிகமாக்கியது. தினசரி விமானங்களின் பயன்பாடு நேரமும் அதிகரித்துள்ளது.


களத்தில், போயிங் 737 விமானங்களில் நிறுவனம் பல்வேறு செலவுகளை எதிர்கொண்டு வருகிறது. விமானம் மற்றும் துணை குத்தகை வாடை நோக்கி ரூ.114.1 கோடியை நிறுவனம் இதர வருமானமாக கருதியுள்ளது.

இந்திய விமானத் துறையில் ஏற்பட்ட கொள்ளவு இடைவெளியில் நிரப்புவதன் மூலம் பயணிகள் சங்கடத்தை பெருமளவு குறைத்துள்ளோம் என்று அஜய் சிங் கூறியுள்ளார்.

மேக்ஸ் விமான சிக்கல் இல்லை என்றால் நிறுவன முடிவுகள் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது 52 உள்ளூர் மார்கம் மற்றும் 9 சர்வதேச இடங்களுக்கு தினமும் 550 விமானங்களை இயக்கி வருகிறது. நாட்டின் பெரிய பிராந்திய விமான சேவை நிறுவனமாக விளங்குகிறது.


செய்தி: ஏ.என்.ஐ | தமிழில்: சைபர்சிம்மன்


4+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags