Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

6வது ‘ஆரம்பம்’ ஸ்டார்ட் அப் போட்டியில் வென்ற 3 மாணவர்கள் குழு அறிவிப்பு!

இந்திய தொழிலக கூட்டமைப்பின் அங்கமான இளம் இந்தியர்கள் அமைப்பின் (CII Young Indians (Yi) –மதுரை பிரிவு,நேட்டிவ்லீட் பவுண்டேஷனுடன் இனைந்து, 6 வது ஆரம்பம் ஸ்டார்ட் அப் போட்டியில் மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

6வது ‘ஆரம்பம்’ ஸ்டார்ட் அப் போட்டியில் வென்ற 3 மாணவர்கள் குழு அறிவிப்பு!

Monday November 23, 2020 , 2 min Read

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் அங்கமான இளம் இந்தியர்கள் அமைப்பின் (CII Young Indians (Yi) –மதுரை பிரிவு, நேட்டிவ்லீட் ஃபவுண்டேஷனுடன் இனைந்து, 6வது ‘ஆரம்பம்’ ஸ்டார்ட் அப் போட்டியை நடத்தியது.


இந்த போட்டியில் மாணவர் பிரிவில், காசிலிங்கம் அகாடமி கல்வி நிறுவனத்தைச்சேர்ந்த ஸ்வாதி, சீம கருவேலம் சாறு கொண்டு உணவுப் பொருட்களை பேக் செய்யும் முறையை உருவாக்கியதற்காக தேர்வு செய்யப்பட்டார்.


இளம் இந்தியர்கள் (Yi) அமைப்பு புதுமையாக்கம், தொழில்முனைவு ஆகியவற்றை நாடு முழுவதும் ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்குவதற்கான அமைப்பாக நேட்டிவ்லீட் செயல்பட்டு வருகிறது.


இந்த இரு அமைப்புகளும் இணைந்து 2015ம் ஆண்டு முதல் ஸ்டார்ட் அப் போட்டியை ஆரம்பம் எனும் பெயரில் நடத்தியது. தொடர்ந்து மாணவர் சமூகத்தின் மத்தியில், தொழில்முனைவு ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்த போட்டியை நடத்தி வருகிறது என இளம் இந்தியர்கள் – மதுரை பிரிவுத் தலைவர் கல்யாண சுந்தரம் தெரிவித்தார், இந்த போட்டி மாணவர் மற்றும் பொதுப்பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு போட்டியில், மாணவர் பிரிவில் 144 பேர் பங்கேற்றதாகவும், பொதுப்பிரிவில் 26 பேர் பங்கேற்றதாகவும், இவர்களில் இருந்து இறுதி சுற்றுக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், அமைப்பின் மதுரை பிரிவு தொழில்முனைவு தலைவர் ஷர்மிளா தேவி தெரிவித்தார்.

அமைப்பின் இணை தலைவர், மனிரத்னம் ஸ்ரீனிவாசன், மாணவர் பிரிவில் சிறந்த மூன்று ஐடியாக்களை தேர்ந்தெடுத்து அறிவித்தார், பொதுப்பிரிவில் நான்கு புதுமையான ஐடியாக்கள் தேர்வு செய்யப்பட்டன.

நேட்டிவ்லீட் பவுண்டேஷன் சி.இ.ஓ மற்றும் இணை நிறுவனர் சிவராஜா ராமநாதன், புது யுக தொழில்முனைவு கருத்தாக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு தேர்வு நடைபெற்றதாக தெரிவித்தார்.

TiliconVeli Tech Park தலைவர் பிரபாகரன் முருகையா பரிசளிப்பு விழாவில் பங்கேற்று பேசினார். ஜூம் வீடியோ கூட்டத்தின் வாயிலாக வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

மாணவர் பிரிவில், கருவேலம் சாறு கொண்டு உணவுப் பொருட்களை பேக் செய்யும் ஐடியாவை சமர்பித்த காசிலிங்கம் அகாடமி கல்வி நிறுவனத்தின் மாணவி ஸ்வாதி தேர்வு செய்யப்பட்டார். சமூக நோக்கம் மற்றும் கருவேல மரங்களை அகற்ற உதவுவதற்காக இந்த ஐடியா முதல் இடம் பெற்றது.

மதுரை விவசாயக் கல்லூரியைச் சேர்ந்த ஸ்னேகா மற்றும் சந்தோஷ், பிக்சால்ட் எனும், தண்ணீருக்கடியில் உள்ள செடிகளில் இருந்து உப்பை எடுப்பதற்கான முறைகாக இரண்டாம் இடம் பிடித்தனர்.


Mepco schlenk Engineering college பொறியியல் கல்லூரியின் செந்தில்குமார் குழு, மெழுகு மற்றும் கிரானைட் செங்கற்களுக்காக மூன்றாம் இடம் பிடித்தது. பொதுப்பிரிவில், அருள் புஷபம் மற்றும் டாக்டர். எஸ்.கலையரசி முதல் இடம் பெற்றனர். ஸ்டார்ட் அப் போட்டியில் சந்தியா குழு வெற்றி பெற்றது.


கட்டுரை தொகுப்பு: சைபர்சிம்மன்