Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 3.0’- கலந்து கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்...!

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஒன்றுகூடி கொண்டாடும் ‘ஸ்டார்ட் அப் பொங்கல்’ இந்த ஆண்டும் மீண்டும் பிரம்மாண்டமாய் நடைப்பெற உள்ளது. தொடக்க நிறுவன நிறுவனர்கள் உடனடியாக பதிவு செய்து கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்...

‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 3.0’- கலந்து கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்...!

Monday January 07, 2019 , 2 min Read

பொங்கல் நம் தமிழர் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் ஒரு பண்டிகையாகும். இயற்கை அன்னை அளித்த விளைச்சலுக்கு நாம் செலுத்தும் நன்றியாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை அங்கீகரிக்கும் வகையில் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஒன்று கூடி இந்த ஆண்டும் பொங்கலை கொண்டாட முடிவெடுத்துள்ளனர். இது இவர்கள் இணைந்து கொண்டாடும் மூன்றாவது ஆண்டாகும். 

‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 3.0’என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விழா, தமிழகத்தைச் சார்ந்த தொடக்க நிறுவனர்களை ஒருங்கிணைக்கும் ஒரு திருவிழா. இது ஒருவருக்கொருவர் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ளவும், தங்களின் தொடர்புகளை விரிவடையச் செய்யவும் நடத்தப்படும் நிகழ்வு ஆகும். ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலில் உள்ள பலதுறை நிறுவனங்களை பற்றி அறிந்து கொள்ளவும் இவ்விழா உதவும்.

கடந்த ஆண்டு நடைப்பெற்ற ‘ஸ்டார்ட் அப் பொங்கல்’ விழாவில் சுமார் 300 ஸ்டார்ட்-அப்’கள் கலந்து கொண்டனர். அதே போல் இந்த ஆண்டும் கூடுதலாக பல புதிய தொடக்க நிறுவனங்களின் நிறுவனர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னை வந்து கலந்து கொள்ள உள்ளதாக இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டார்ட்-அப் பொங்கல் 3.0 விழா பற்றிய விவரங்கள்:

நாள் : 10th Jan, 2019

இடம்: SRM Institute of Science and Technology, Ramapuram

நேரம்: 2 pm to 7 pm

கடந்த ஆண்டு ஸ்டார்ட் அப் பொங்கல் விழா கோப்புப்படம்

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில், வருகிற 10 ஆம் தேதி நடைப்பெறும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 3.0’ விழாவில், தமிழர் விளையாட்டுகளான பம்பரம், கோலி, பாண்டி, நொண்டி, கபடி நிறுவனர்கள் இடையே நடத்தப்படும். பொங்கல் சமைப்பது, சிலம்பாட்ட நிகழ்ச்சி மற்றும் தமிழ் பாரம்பரிய உணவுகள் பங்கேற்பாளர்களுக்கு இவ்விழாவில் வழங்கப்படும்.

இந்த ஆண்டு பொங்கல் விழாவில் சிறப்பு அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது, ’ஸ்டார்ட்-அப் பட்டிமன்றம்’. ஸ்டார்ட்-அப் பொங்கல் 3.0’ விழாவில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனர்கள் உடனடியாக கீழே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். யுவர்ஸ்டோரி தமிழ் இந்த ஆண்டும் இவ்விழாவின் ஆன்லைன் மீடியா பார்ட்னராக உள்ளது.

Startup Pongal 3.0 - உங்கள் டிக்கெட்டை பதிவு செய்து பெறுங்கள்.

இவ்விழாவை பற்றி தொடக்க நிறுவன நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்விழாவிற்கு ஸ்பான்சர் செய்ய விரும்பும் நிறுவனர்கள் கீழே உள்ள பதிவில் செய்யலாம்.

Startup Pongal 3.0 Sponsor

நிகழ்ச்சி பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு: Arul Murugan- 9843824949/ Suresh Radhakrishnan -9710931622.