மளிகைக் கடையாக துவங்கி 42 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பன்சாரி குழுமம்!

1940-களில் துவக்கப்பட்ட தில்லியைச்சேர்ந்த பன்சாரி குழுமம், இன்று சமையல் எண்ணெய் மற்றும் பிற உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் சிறந்து விளங்கும் தொழில் குழுமமாக வளர்ந்திருக்கிறது.
6 CLAPS
0

ஷம்மி அகர்வாலின் கொள்ளு தாத்தா தில்லியில் 1940'களில் மளிகைக் கடை இன்றை நடத்தி வந்தார். அதன் பிறகு அவரது தாத்தா, கோகு சந்த் இந்த கடையை சமையல் எண்ணெய் மொத்த விற்பனையாக வளர்த்தெடுத்தார். இதுவே பன்சாரி குழுமத்தின் துவக்கமாக அமைந்தது.

பின்னர் 1962ல். அவர் மேற்கு வங்கத்தில், பன்சாரி இண்டஸ்டிரீஸ் எனும் பெயரில் எண்ணெய் ஆலை ஒன்றை அமைத்தார். 1990’களில் இந்த குழுமம் வர்த்தகத்தில் இருந்து உற்பத்தியில் கவனம் செலுத்தத் துவங்கியது. 1990 முதல் 2005 வரை குழுமம் வட இந்தியாவில் ஏழு உற்பத்தை மையங்களை அமைத்தது.

இன்று குழுமம் சந்தையில் முக்கிய நிறுவனமாக உருவாகியிருக்கிறது. சோயா எண்ணெய், ரீபைண்ட் எண்ணெய், கடு எண்ணெய் உள்ளிட்டவற்றை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்கிறது.

பன்சாரி குழுமம் இந்தப் பிரிவில் தில்லியை சுற்றியுள்ள பகுதிகளில் 17 சதவீத சந்தை பங்கை கொண்டுள்ளது. வட இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இருப்பைக் கொண்டுள்ளது.

தென்னிந்தியாவில் நிறுவனம் சில பொருட்களை விற்பனை செய்கிறது என்கிறார் ஷம்மி.

உதாரணத்திற்கு தெலுங்கானாவில் அரசி விற்பனை மூலம் பிரியாணி சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது. தோசா மிக்சையும் விற்பனை செய்கிறது. மேலும், பன்சாரி குழுமம், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 42 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

வர்த்தக வளர்ச்சி

எம்பிஏ பட்டதாரியான ஷம்மி, 2010ல் வர்த்தகத்தில் இணைந்தார். பணியாளர்களை தொழில்முறை தன்மை பெற வைப்பதற்கான நடவடிக்கைகளை முதலில் மேற்கொண்டார்.

“துவக்கத்தில் வேலைக்கு ஆட்களை நியமிக்கும் போது பரிந்துரைகளை முக்கியமாகக் கருதினோம். ஆனால் கல்வித்தகுதி போன்றவற்றை நான் முக்கியமாகக் கருதத் துவங்கினேன்” என்கிறார் ஷம்மி.

மேலும், ஷம்மி நிறுவனத்தில் இணைந்த பிறகு பிராண்டிங்கிலும் கவனம் செலுத்தினார்.

சமையல் எண்ணெயில் இருந்து, அரசி மற்றும் மாவு உற்பத்தி, விற்பனையிலும் நிறுவனம் விரிவாக்கம் செய்தது.

“நுகர்வோர் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் விரும்புகின்றனர். எனவே அனைத்து வகையான மளிகைப் பொருட்களையும் அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்தோம்,” என்கிறார்.

2008ல் நிறுவனம், ரியல் எஸ்டேட், தேக்கு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளிலும் விரிவாக்கம் செய்தது. மாற்றம் மற்றும் புதுமையாக்கத்தை நிறுவனம் கடைப்பிடித்து வருவதால் தொடர்ந்து பொருத்தமாம நிறுவனமாக இருப்பதாக ஷம்மி கூறுகிறார்.

சர்வதேச சந்தை

பன்சாரி குழுமம் (Pansari Group), 2018ல் சர்வதேச சந்தையில் நுழைந்தது. யூ.கே., கண்டா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விரிவாக்கம் செய்தது.

”நீண்ட காலமாக நாங்கள் பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு துணை நிறுவனம் போல செயல்பட்டோம். மேலும், முந்தைய தலைமுறையினர் உள்நாட்டு சந்தைக்குத் தேவையான பொருட்களில் கவனம் செலுத்தினர். சர்வதேச சந்தையை முக்கியமாக நினைக்கவில்லை,” என்கிறார் ஷம்மி.

வெளிநாடுகளில் வாழும் இந்திய மக்கள் இந்திய பொருட்களை விரும்புவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்திய பொருட்கள் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெறுவதாகவும் அவர் கூறுகிறார்.

மேலும், சர்வதேச சந்தையில் போட்டியும் அதிகம் இல்லை என்கிறார். உதாரணமாக ஆஸ்திரேலியாவில் அரசியை எடுத்துக்கொண்டால் பாகிஸ்தான் அல்லது இந்தியாவில் இருந்து வரவேண்டும் என்கிறார்.

தற்சார்பு இந்தியா

பல்வேறு அறிக்கைகளின் படி, இந்தியா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது, என்றாலும் நாட்டின் இறக்குமதி புள்ளிவிவரங்கள் கவலை அளிக்கிறது. இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி ஆண்டுக்கு ரூ.70,000 கோடியாக இருப்பதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியா தனது 70 சதவீத சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதாக ஷம்மி கூறுகிறார். இத்துறையில் இந்தியா இன்னமும் தற்சார்பு பெறவில்லை என்கிறார்.

“கடுகு விதைகளின் விலை கடந்த சில ஆண்டுகளில் கிலோ ரூ.45 என்பதில் இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கலாம். அரசும் இத்துறை மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.”

எதிர்காலம்

கோவிட்-19 பெருந்தொற்றால் நுகர்வோர் துறை அதிகம் பாதிக்கப்படவில்லை என்கிறார் ஷம்மி. சப்ளை செயின் பாதிப்பால் சில பிரச்சனைகள் உண்டானது. எனினும் ஹோட்டல், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட துறைகளில் பாதிப்பு உண்டானது. டிஜிட்டல் வழிக்கு மாறுவது மூலம் இதை எதிர்கொண்டனர். பன்சாரி குழுமமும் தனது இணையதளத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டது.

“டிஜிட்டல் தான் இப்போதைய தேவை. வரும் மாதங்களில் எங்கள் இணைய இருப்பை வலுவாக்குவோம்,” என்கிறார் அவர்.

மேலும், பெருந்தொற்று காலத்தில் ராகி போன்றவற்றின் தேவை அதிகரித்துள்ளது என்கிறார். நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் உணவுப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world