பிழை தகவல்கள், பொய்ச்செய்திகளுக்கு எதிராக பிளாக்செயின் மேடையை உருவாக்கும் Fact Protocol
January 24, 2023, Updated on : Tue Jan 24 2023 15:59:37 GMT+0000

- +0
- +0
இன்று சராசரி செய்தி நுகர்வோர், சமூக ஊடகங்களை அதற்கான பிரதான வழியாகக் கருதுகின்றனர். இந்தியர்களில் 63 சதவீதம் பேர் சமூக ஊடகத்தை செய்திகளை பெறுவதற்கான பிரதான வழியாகக் கருதுவதாக ராய்ட்டர்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த பின்னணியில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் எஸ்.இ.ஓ வல்லுனரான மோகித் அகாடி, எல்லாவற்றையும் தீவிரமாக தகவல் சரி பார்த்தலுக்கு உட்படுத்தும் பழக்கம் கொண்டிருந்தார். அவரது கட்டுரைகளில் பிழைத்தகவல் இல்லாமல் செய்யும் முயற்சியாக இது துவங்கியது.
இப்போது அவர், ஆன்லைனில் பார்க்கும் அல்லது நண்பர்கள் பகிரும் படங்கள், கட்டுரைகள், தகவல்களில் சரி பார்த்தலை மேற்கொள்ளும் வழக்கம் கொண்டிருக்கிறார். இந்தப் பிரச்சனையில் ஏற்பட்ட நெருக்கமான ஈடுபாடு காரணமாக, தகவல்களை சரி பார்த்தற்காக என்று ஒரு நிறுவனத்தை உண்டாக்கியிருக்கிறார்.

இணை நிறுவனர் தாமோதர் கல்யாணுடன் இணைந்து அவர் உருவாக்கிய ’ஃபேக்ட் ப்ரோடோகால்’, (
) பிளாக்செயின் தொழில்நுட்பம் அடிப்படையில் மையமில்லாத தகவல் சரிபார்த்தல் அமைப்பையும், சரி பார்ப்பு அடுக்கையும் உண்டாக்கியுள்ளது.“தகவல் சரிபார்த்தலுக்கான விக்கிபீடியாவாக விளங்கவும், உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்பாளர்களை பெறவும் விரும்புகிறோம்,” என்று மோகித் டிகிரிப்டிங் ஸ்டோரிடிடம் கூறினார்.
தகவல் சரிபார்த்தலை சரியாக செய்யக்கூடிய எந்த பயனாளியையும் வேலிடேட்டராக ஆக்கும் வாய்ப்பை ஃபேக்ட் ப்ரோடோகால் வழங்குகிறது. இதற்கு நெறிமுறைகளை பின்பற்றுவது அல்லது துறை சார்ந்த அனுபவம் தேவை.
தகவல் சரிபார்த்தல்
இந்த செயல்முறை மிகவும் எளிதானது. ஒருவர் உள்ளடக்கம் அல்லது தகவலை பகிரும் போது, தகவல் சரி பார்ப்பவர் அதை சரி பார்த்து உறுதி செய்ய முற்படுகிறார். அந்த உள்ளடக்கம் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுவதன் மூலம் இதை செய்யலாம்.
இதன் பிறகு, தகவல் சரி பார்ப்பவர்கள் அதை உறுதி செய்கின்றனர். இதையடுத்து இந்த தகவல் பிளாக்செயினில் சேமிக்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் இதை கொண்டு சரி பார்க்கலாம்.
மையமில்லா அமைப்பு, அதிகாரம் குவிவதை தடுத்து, சரி பார்க்கும் செயல்முறையை ஜனநாயகமயமாகவும், சார்பில்லாமலும், வெளிப்படையாகவும் வைத்திருப்பதாக நிறுவனர்கள் கூறுகின்றனர்.
“உள்ளடகத்திற்கான கால பதிவு மற்றும் பரிவர்த்தனை குறிகள் சங்கிலியில் இடம்பெறுகின்றன. இவை எல்லாமே தணிக்கை எதிர்ப்பு கொண்டவை,” என்கிறார் மோகித்.
எனினும், சரி பார்த்தலுக்காக உள்ளடக்கத்தை பதிவு செய்வதை மறுபதிப்பிப்பாக புரிந்து கொள்ளக்கூடாது.
“எங்கள் மேடையில் உள்ளடக்கத்தை மறு வெளியீடு செய்வதில்லை, ஆனால், சங்கிலியில் அதற்கான நிரந்தர பதிவை உருவாக்குகிறோம். இதற்கான சரி பார்த்தல் மற்றும் உறுதிப்படுத்தலையும் சேமிக்கிறோம்,” என்கிறார் மோகித்.
வாசகர்கள், புதிய செய்தி வடிவம் அல்லது மாற்றப்பட்ட செய்தி வடிவத்தை மூலத்துடன் ஒப்பிட்டு பார்க்க இது உதவும் என்கிறார்.
இந்தத் தகவல் சரி பார்த்தலில் நிறுவனம் இறுதி கட்டத்தில் உள்ளது, இந்த மேடை விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. இது வளர்ச்சி அடையும் போது, மையக் குழு தகவல் சரிபார்ப்பவர்களைக் கண்காணிப்பதில் இருந்து விலகிக் கொண்டு, ஏற்கனவே உள்ள வேலிடேட்டர்கள் புதிய உறுப்பினர்களை சீராய்வு செய்ய வழி செய்யும்.
இந்தத் தகவல் சரி பார்ப்பு திட்டத்திற்கு 2FA News எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிளாக்செயின் சார்ந்த பிரிவு மற்றும் வெப் 3 அம்சங்கள் ’பிளாக் குவெஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஃபேக்ட் ப்ரோடோகால்’, எத்திரியம் சார்ந்த பாலிகன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பங்கேற்பாளர்களுக்கு எதிர்காலத்தில் ஃபேக்ட் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. புதிய விதிகளை உருவாக்குவது மற்றும் குறிப்பிட்ட முடிவுகளை மேற்கொள்வதற்கான நிர்வாகத்தை ஜனநாயகமயமாக்கும் விதமாகவும் இந்த டோக்கன்கள் அமையும்.
ஆவணமாக்கப்பட்ட உள்ளடக்கம், ஐபிஎப்.எஸ் முறையில் சேமிக்கப்படுகிறது. இது எத்திரியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பெரிதான சரிபார்த்தல் அடுக்கை உண்டாக்குவதற்காக நிறுவனம், சர்வதேச தகவல் சரிபார்த்தல் வலைப்பின்னலுடன் (IFCN) இணைந்து செயல்பட இருப்பதாகவும் மோகித் கூறுகிறார். தகவல் சரிபார்ப்புகளை திரட்ட மற்றும் தனது நெறிமுறைகள் கீழ் மேலும் வேலிடேட்டர்களை கொண்டு வர இது உதவும்.

“IFCN தகவல் சரிபார்த்தலுக்கான நெறிமுறைகளை வகுத்துள்ளது. எனினும், பிளாக்செயின் திறனை உருவாக்கும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எனவே, இந்த அமைப்பின் உறுப்பினர்களைக் கொண்டு வந்து, அவர்கள் பணியை சங்கிலியில் இடம்பெறச்செய்து உறுதி செய்வோம்,” என்கிறார் மோகித்.
தற்போது எழுத்து வடிவ உள்ளடக்கத்தை தகவல் சரி பார்க்கும் கொண்டுள்ள நிலையில், படங்கள் மற்றும் வீடியோக்களை சரி பார்த்தலையும் பரிசீலித்து வருகிறது. படங்களை சரி பார்க்க அடோபியின் திறவுமூல கருவிகளை பயன்படுத்தி வருகிறது. இதை தனது மேடையில் செயல்படுத்தவும் முயன்று வருகிறது.
தகவல் சரிபார்த்தல் தொழில்நுட்பத்தை வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் அதிகம் இருப்பதாகக் கூறுகிறார். உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வர்த்தக நிறுவன தரத்திலான தீர்வையும் வழங்க திட்டமிட்டுள்ளது. இது எதிர்காலத்தில் வருவாய்க்கான வாய்ப்பாக அமையும் என நம்புகிறார்.
தகவல் சரிபார்த்தலுக்கு உருவாக்கப்பட்ட பிளாக்செயின், கேஒய்சி தகவல் சரி பார்த்தல், அடையாளம் சரி பார்ப்பு, ஆவணம் சரி பார்த்தல் உள்ளிட்டவற்றுக்கும் பயன்படுத்தப்படலாம்.
இவற்றை உருவாக்க ஃபேக்ட் ப்ரோடோகால் திட்டமிட்டுள்ளது. இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்குவது, சுயநிதி ஸ்டார்ட் அப்புக்கு சவாலாக இருக்கலாம். பிளாக்செயின் சார்ந்த, உலகலாவிய மையமில்லாத தகவல் சரிபார்த்தல் அமைப்பை உருவாக்குவதற்கான செலவு அதிகமானது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மோகித் நம்பிக்கயுடன் இருக்கிறார்.
“உள்ளடக்க உருவாக்கம் ஜனநாயகமயமாக்கல் மற்றும் மக்கள் இதழியலை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ள பல மேடைகள் உள்ளன. ஆனால், வெப் 3 தொழில்நுட்பத்தில் தகவல் சரி பார்த்தல் மேடைகள் இல்லை. வர்த்தக சேவை நோக்கில் சில திட்டங்கள் இருந்தாலும், ஒரே ஒரு திட்டத்தை விட இந்த சந்தை மிகவும் பெரியது,” என்கிறார் மோகித்.
ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்

இந்தியாவில் பொய் செய்திகளை பரப்பிய பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் முடக்கம்!
Edited by Induja Raghunathan
- +0
- +0