Stock News: IT-யால் தடுமாறும் இந்திய பங்குச்சந்தை; காரணம் என்ன?

இந்திய பங்குச்சந்தையானது இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Stock News: IT-யால் தடுமாறும் இந்திய பங்குச்சந்தை; காரணம் என்ன?

Tuesday June 06, 2023,

1 min Read

இந்திய பங்குச்சந்தையானது இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

பங்குச்சந்தை நிலவரம் (06/06/2023):

நேற்று புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தையானது இன்று சரிவுடன் விற்பனையாகி வருவது முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 188.07 புள்ளிகள் சரிந்து 62,599 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 47.15 புள்ளிகள் சரிந்து 18,545 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
stock

சரிவுக்கான காரணங்கள்:

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் இன்று தொடங்கி ஜூன் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகித உயர்வை இடைநிறுத்தம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை வெளியேற்றி வருவதும் சரிவுக்கான காரணமாக அமைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் மிகவும் முக்கியத் துறையான ஐ.டி. பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்ததுள்ளது. எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ் மற்றும் விப்ரோ பங்குகள் இரண்டு சதவீதம் வரை சரிந்தது பங்குச்சந்தைக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

ஏற்றம் கண்ட பங்குகள்:

அதானி எண்டர்பிரைசஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

அல்ட்ராடெக் சிமெண்ட்

டாடா மோட்டார்ஸ்

இறக்கம் கண்ட பங்குகள்:

இன்ஃபோசிஸ்

டெக் மஹிந்திரா

விப்ரோ

ஹெச்சிஎல் டெக்

டிசிஎஸ்

இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து 82.56 ஆக உள்ளது.