Stock News: இரண்டே காரணங்களால் ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை - அது என்ன?
இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (26/05/2023):
நேற்று சரிவுடன் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 239.90 புள்ளிகள் உயர்ந்து 62,108 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 71.10 புள்ளிகள் அதிகரித்து 18,392 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம்:
ரூபாய் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்க பத்திர வருவாயில் சரிவும் இந்திய பங்குச்சந்தையானது மே மாதத்தின் தொடக்கத்தில் உயர காரணமாக அமைந்துள்ளது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 82.74 ஆக குறைந்திருந்தாலும், அமெரிக்க 10 ஆண்டு வருமானம் 3.82% ஆக உயர்ந்திருந்தாலும் வெளிநாட்டு நிறுவன முதலீடுகளின் தொடர்ச்சியான முதலீடு காரணமாக பங்குச்சந்தையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
4வது காலாண்டு நிதி அறிக்கைகளின் படி, கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தனியார் கேபெக்ஸும் அதிகரித்து வருவதும் சந்தையின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டெக் மஹிந்திரா
மாருதி
அல்ட்ராடெக் சிமெண்ட்
விப்ரோ
பஜாஜ் ஃபின்சர்வ்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இன்ஃபோசிஸ்
டைட்டன்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
இறக்கம் கண்ட பங்குகள்:
பவர் கிரிட்
ஹெச்டிஎஃப்சி
ஆக்சிஸ் பேங்க்
இண்டஸ் இண்ட பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 82.67 ஆக உள்ளது.