Stock News: கடும் சரிவில் இந்திய பங்குச் சந்தை; பின்னுக்குத் தள்ளிய 'பேங்க் ஸ்டாக்'
January 25, 2023, Updated on : Wed Jan 25 2023 06:02:01 GMT+0000

- +0
- +0
இந்திய பங்குச்சந்தையானது இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (25/01/2023)
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தையானது புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வந்த நிலையில், இன்று யாருமே எதிர்பாராத அளவிற்கு கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக வங்கி பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 584.95 புள்ளிகள் சரிந்து 60,359 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 189 புள்ளிகள் சரிந்து 17,929 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

சரிவுக்கான காரணம் என்ன?
கடந்த சில இரு தினங்களாக இந்திய பங்குச்சந்தையில் ஐ.டி., ஆட்டோ, வங்கி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் நல்ல உயர்வுடன் வர்த்தகமாகி வந்தன. ஆனால் இன்று வங்கி துறை பங்குகளில் ஏற்பட்டுள்ள இறக்கம் இந்திய பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
டாடா ஸ்டீல்
மாருதி சுஸுகி
சிப்லா
பஜாஜ் ஆட்டோ
ஹீரோ மோட்டோகார்ப்
அதானி எண்டர்பிரைசஸ்
ஹெச்சிஎல் டெக்
அதானி போர்ட்
லார்சன் அண்ட் டூப்ரோ
இறக்கம் கண்ட பங்குகள்:
இண்டஸ்இண்ட் பேங்க்
எஸ்பிஐ
கோடக் மஹிந்திரா பேங்க்
எச்டிஎஃப்சி பேங்க்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 20 காசுகள் சரிந்து 81.50 ஆக உள்ளது.

- +0
- +0