Stock News: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; ஜொலி ஜொலிக்கும் SBI!

By Kani Mozhi
November 23, 2022, Updated on : Wed Nov 23 2022 06:49:46 GMT+0000
Stock News: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; ஜொலி ஜொலிக்கும் SBI!
கடந்த சில நாட்களாகவே சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தையானது, இன்று உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கடந்த சில நாட்களாகவே சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தையானது, இன்று உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 103.52 புள்ளிகள் அதிகரித்து 61,524 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 30.60 புள்ளிகள் அதிகரித்து 18,274 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
Stock

இன்று இந்திய பங்குச்சந்தையின் வர்த்தகம் உயர பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் காரணமாக அமைந்துள்ளன. பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா பேங்க், இந்தியன் பேங்க், யூனியன் பேங்க், சென்ட்ரல் பேங்க் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் பச்சை வண்ணத்தில் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யின் பங்குகள் 1.10 சதவீதம் அளவிற்கு உயர்ந்து 605.70 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.


உயர்வுக்கான காரணங்கள்:


அமெரிக்காவில் பணவீக்கம் சற்றே குறைந்துள்ளதை அடுத்து ஃபெடரல் வங்கி நவம்பர் மாத நடைபெற உள்ள கூட்டத்தில் மிகக்குறைவான அளவிலான வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முதலீட்டாளர்களின் கவனம் ஃபெடரல் வங்கியின் அறிவிப்பின் மீது திரும்பியுள்ளது.


அமெரிக்க பெடரல் வங்கி அறிவிப்பை எதிர்ப்பார்த்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரித்த போதிலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்குவதால் பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருக்கிறது.


நவம்பர் 22ம் தேதி வெளியான தற்காலிக தரவுகளின் படி, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) 697.83 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர், அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DIIs) இந்திய பங்குச் சந்தையில் 636.39 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

மற்றொருபுறம் சீனாவின் கொரோனா பரவலையும் கடந்து ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதும், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வும் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் உயரக் காரணமாக அமைந்துள்ளது.

ஏற்றம் கண்ட பங்குகள்:

எஸ்பிஐ

மாருதி சுசூகி

டாக்டர் ரெட்டிஸ்

விப்ரோ

பஜாஜ் ஃபின்சர்வ்

டைட்டன்

ஐசிஐசிஐ பேங்க்

டாடா ஸ்டீல்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

சன்பர்மா


இறக்கம் கண்ட பங்குகள்:


ஐடிசி

டிசிஎஸ்

ஏசியன் பெயிண்ட்ஸ்

அல்ட்ராடெக் சிமென்ட்


ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து 81.81 ஆக உள்ளது.