Stock News: அமெரிக்காவால் அடி வாங்கிய இந்திய பங்குச்சந்தை; அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

By Kani Mozhi
September 23, 2022, Updated on : Fri Sep 23 2022 06:56:30 GMT+0000
Stock News: அமெரிக்காவால் அடி வாங்கிய இந்திய பங்குச்சந்தை; அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!
வாரத்தின் இறுதிநாளான இன்று இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு சரிவை நோக்கி தீவிரமாக நகர்ந்து வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

வாரத்தின் இறுதிநாளான இன்று இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு சரிவை நோக்கி தீவிரமாக நகர்ந்து வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 664.17 புள்ளிகள் சரிந்து 58,448 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 196.90 புள்ளிகள் சரிந்து 17,433 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
Market

காரணம்: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 4வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து டாலரின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு அதிகரிப்பது பிற நாணயங்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்றம் கண்ட பங்குகள்:


இன்ஃபோசிஸ்

சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் (எச்யுஎல்)

டாக்டர். ரெட்டிஸ் லேபரட்டரீஸ்


இறக்கம் கண்ட பங்குகள்:


மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (எம்&எம்)

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

ஹெச்டிஎஃப்சி

பஜாஜ் ஃபைனான்ஸ்

கோடக் மஹிந்திரா வங்கி

இண்டஸ்இண்ட் வங்கி

ஆக்சிஸ் வங்கி

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா


ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் குறைந்து 81.09 ரூபாயாக உள்ளது.

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற