Stock News: பாதாளத்தில் பங்குச்சந்தை: காரணம் என்ன?

By Kani Mozhi
September 22, 2022, Updated on : Thu Sep 22 2022 06:59:53 GMT+0000
Stock News: பாதாளத்தில் பங்குச்சந்தை: காரணம் என்ன?
வாரத்தின் நான்காவது நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் எதிர்பாராத அளவிற்கு சரிய ஆரம்பித்துள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

வாரத்தின் நான்காவது நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் எதிர்பாராத அளவிற்கு சரிய ஆரம்பித்துள்ளது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 256.89 புள்ளிகள் சரிந்து 59,146 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 81 புள்ளிகள் சரிந்து 17,618 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

காரணம்: அமெரிக்க பெடரல் ரிசர்வின் இரண்டு நாள் பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) கூட்டம் நேற்று நிறைவடைந்த நிலையில், வட்டி விகிதத்தை 75 புள்ளிகள் உயர்த்தி அறிவித்தது இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்செக்ஸ் 0.4 சதவீதமும், நிஃப்டி 0.3 சதவீதம் சரிந்துள்ளது.

Market

ஏற்றம் கண்ட பங்குகள்:


ஐடிசி

மாருதி

இண்டஸ்இண்ட் வங்கி

ஹிந்துஸ்தான் யூனிலீவர்சி


இறக்கம் கண்ட பங்குகள்:


எச்டிஎஃப்சி

விப்ரோ

டெக் மஹிந்திரா

டாக்டர் ரெட்டிஸ்

எச்சிஎல் டெக்

சன் பார்மா


ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1.76 காசுகள் உயர்ந்து 81.5 ரூபாயாக உள்ளது.