Stock News: பங்குச்சந்தையில் திடீர் மாற்றம்; பலத்த அடிவாங்கிய ஐச்சர் மோட்டார்ஸ், எம்&எம் பங்குகள்; PSU பங்குகள் ஜோர்!
கடந்த சில நாட்களாகவே உயர்வுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தையானது, இன்று மீண்டும் சரிவை நோக்கி நகர்ந்து வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே உயர்வுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தையானது, இன்று மீண்டும் சரிவை நோக்கி நகர்ந்து வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 353.82 புள்ளிகள் அதிகரித்து 62,902 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 112.95 புள்ளிகள் அதிகரித்து 18,700 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி முதலீட்டில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட், உலோகம் மற்றும் ஊடக துறைகள் பச்சை நிறத்தில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், ஆட்டோமொபைல்ஸ் மற்றும் நிதி துறை பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
பொதுத்துறை வங்கிகளான இந்தியன் பேங்க் (2.25%), பேங்க் ஆப் மகாராஷ்டிரா (1.66%), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (1.38%) என உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு சற்றே ஆறுதலான விஷயமாக அமைந்துள்ளது.
சரிவுக்கான காரணங்கள்:
கடந்த 8 நாட்களாக இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வந்த நிலையில், உலக அளவில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இன்று காலை முதலே சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது.
டிசம்பர் மாதம் குறைந்த அளவிலான வட்டி விகிதம் மட்டுமே உயர்த்தப்படும் என அமெரிக்க ஃபெடரல் வங்கி அறிவித்துள்ளது டாலர் குறியீட்டு எண்ணை சரிவை நோக்கி நகர்த்தியுள்ளது. மேலும் ஆசியாவின் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் குறைந்த அளவில் வர்த்தகமாகி வருவதும் இந்திய பங்குச்சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
டாடா ஸ்டீல்
டெக் மஹிந்திரா
இண்டஸ்இண்ட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஐடிசி
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
மாருதி
அல்ட்ராடெக் சிமெண்ட்
மஹிந்திரா & மஹிந்திரா
ஏசியன் பெயிண்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து 81.08 ஆக உள்ளது.
Gold Rate Chennai: இப்போ நகை வாங்க யோசிக்கனும்? 40 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!