Stock News: மறுபடியும் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய பங்குச்சந்தை!

By Kani Mozhi
November 25, 2022, Updated on : Fri Nov 25 2022 06:13:36 GMT+0000
Stock News: மறுபடியும் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய பங்குச்சந்தை!
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 314.55 புள்ளிகள் அதிகரித்து 61,825புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 94.45 புள்ளிகள் அதிகரித்து 18,361புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
Stock

உயர்வுக்கான காரணங்கள்:

நேற்று தேங்ஸ்கிவிங்கை முன்னிட்டு அமெரிக்க பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வர்த்தகத்தின் இறுதியில் இந்திய பங்குச்சந்தையான வரலாறு காணாத உயர்வுடன் முடிவடைந்தது. ஆனால், இன்று காலை தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.


ஃபெடரல் ரிசர்வ் ரேட்-செட்டிங் கமிட்டி வட்டி விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது முதலீட்டாளர்கள் மத்தியில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


மற்றொருபுறம் உலகிலேயே மிகப்பெரிய இரண்டாவது பொருளாதார நாடான சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஆசிய பங்குச்சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்றம் கண்ட பங்குகள்:


லார்சன் & டூப்ரோ

ஆக்சிஸ் வங்கி

இண்டஸ்இண்ட் வங்கி

என்டிபிசி


இறக்கம் கண்ட பங்குகள்:


பஜாஜ் ஃபைனான்ஸ்

நெஸ்லே இந்தியா

ஏசியன் பெயிண்ட்ஸ்

ஹிந்துஸ்தான் யுனிலீவர்

இன்ஃபோசிஸ்

டைட்டன்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

பவர் கிரிட் மற்றும் ஐடிசி


ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 16 காசுகள் அதிகரித்து 81.54 ஆக உள்ளது.