Stock News: வாரத்தின் முதல் நாளே சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிவு!

இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Stock News: வாரத்தின் முதல் நாளே சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிவு!

Monday September 18, 2023,

1 min Read

இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பங்குச்சந்தை நிலவரம் (18/09/2023):

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் விற்பனையாகி வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 10.5.91 புள்ளிகள் சரிந்து 67,732 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 12.20 புள்ளிகள் சரிந்து 20,180 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
stock

சரிவுக்கான காரணம் என்ன?

உலகச் சந்தைகளில் பலவீனமான போக்குகள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகிதம் தொடர்பான கணிப்புகளும் ஆசிய பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவை நோக்கி நகர்ந்து வருவதாக முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்றம் கண்ட பங்குகள்:

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

டைட்டன்

என்டிபிசி

ஏசியன் பெயிண்ட்ஸ்

இறக்கம் கண்ட பங்குகள்:

இன்ஃபோசிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

டெக் மஹிந்திரா

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

விப்ரோ

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்திய ரூபாயின் மதிப்பு: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து 83.09 ஆக உள்ளது.