Stock News: புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை - அடித்து ஆடும் ‘அதானி’, ‘அம்பானி’ நிறுவனங்கள்!
கடந்த சில நாட்களாகவே சற்றே உயர்ந்து வந்த இந்திய பங்குச்சந்தையானது இன்று புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே சற்றே உயர்ந்து வந்த இந்திய பங்குச்சந்தையானது இன்று புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (31/03/2023):
கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தையானது, இன்று புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இது நிதியாண்டு கணக்கை முடிக்க உள்ள முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 582.98 புள்ளிகள் உயர்ந்து 58,557 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 171.55 புள்ளிகள் அதிகரித்து 17,251 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான அதானி மற்றும் அம்பானி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளதும், ஆசிய பங்குச்சந்தைகளான சியோல், ஜப்பான், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருவதும் இந்திய பங்குச்சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் அதிகரிப்பும் பங்குச்சந்தை உயர காரணமாக அமைந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை நிலவரம்:
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியில் அனைத்து துறை குறியீடுகளும் இன்று ஆரம்பம் முதலே பச்சை வண்ணத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் 1.53 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐடி பங்குகள் 1.28 சதவீதமும், தனியார் வங்கிகளின் பங்குகள் 1.25 சதவீதமும் உயர்ந்துள்ளன. உலோகப் பங்குகள் 1.23 சதவீதமும், நிஃப்டி வங்கி பங்குகள் 1.14 சதவீதமும், ஊடகப் பங்குகள் 1.13 சதவீதம் உயர்ந்துள்ளன.
அதானி, அம்பானி பங்குகள் உயர்வு:
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளது ஒட்டுமொத்த பங்குச்சந்தையிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஹெச்சிஎல்டெக்
டெக் மஹிந்திரா
ஐசிஐசிஐ வங்கி
அதானி எண்டர்பிரைசஸ்
ஆக்சிஸ் வங்கி
பவர் கிரிட்
இறக்கம் கண்ட பங்குகள்:
சன் பார்மா
ஏசியன் பெயிண்ட்ஸ்
பிரிட்டானியா
பார்தி ஏர்டெல்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் சரிந்து 82.10 ஆக உள்ளது.