Stock News: தொடர்ந்து ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தை; முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

By Kani Mozhi
November 24, 2022, Updated on : Thu Nov 24 2022 06:41:46 GMT+0000
Stock News: தொடர்ந்து ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தை; முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 314.55 புள்ளிகள் அதிகரித்து 61,825புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 94.45 புள்ளிகள் அதிகரித்து 18,361புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
Stock

உயர்வுக்கான காரணங்கள்:

முதலீட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஃபெடரல் வங்கியின் நவம்பர் மாதக் கொள்கைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் பிறகு, வெளியான அறிவிப்பில் வட்டி விகிதத்தை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது அமெரிக்க பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. டாலரின் குறியீட்டு எண் மற்றும் கருவூல விளைச்சல் குறைந்ததது.


இன்று பொது விடுமுறை காரணமாக அமெரிக்க பங்குச்சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், ஆசிய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் கணிசமான அளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.


இன்று இந்திய பங்குச்சந்தை உயர பொதுத்துறை வங்கிகளின் பங்குகளும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி பிஎஸ்யு வங்கியின் பங்குகள் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக,

ஏற்றம் கண்ட பங்குகள்:

டாடா கன்சியூமர் புரோடக்ட்ஸ்

யுபிஎல்

எச்டிஎஃப்சி லைஃப்

எம்&எம்

பிபிசிஎல்

இறக்கம் கண்ட பங்குகள்:

ஓஎன்ஜிசி

அதானி எண்டர்பிரைசஸ்

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்

பார்தி ஏர்டெல்


ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் அதிகரித்து 81.67 ஆக உள்ளது.