Stock News: உயர்வுடன் தொடங்கி சரசரவென சரிந்த இந்திய பங்குச்சந்தை; காரணம் என்ன?
இந்திய பங்குச்சந்தையானது இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கிய நிலையில், சிறிது நேரத்திலேயே சரசரவென சரியத் தொடங்கியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையானது இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கிய நிலையில், சிறிது நேரத்திலேயே சரசரவென சரியத் தொடங்கியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (31/01/2023):
கடந்த வாரம் முதலே இந்திய பங்குச்சந்தையான கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று பச்சை வண்ணத்தில் வர்த்தகத்தை தொடங்கியது முதலீட்டாளர்களே சற்றே மகிழ்ச்சி அடைய செய்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை, பங்குச்சந்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே சரசரவென சரிய ஆரம்பித்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலை இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 130.51 புள்ளிகள் அல்லது 0.22% உயர்ந்து 59,630.92 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 25.25 புள்ளிகள் அல்லது 0.14% உயர்ந்து 17,674.20 புள்ளிகளுடனும் வர்த்தகமானது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 232.12 புள்ளிகள் சரிந்து 59,275 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 73.45 புள்ளிகள் சரிந்து 17,587 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி குறித்த குற்றச்சாட்டு, இந்திய பங்குச்சந்தையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 3 அமர்வுகளாக வங்கி நிஃப்டி 6.2% கடுமையாக சரிவடைந்த நிலையில் வங்கி பங்குகளில் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இன்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. எனவே முதலீட்டாளர்கள் இந்த இரண்டு அறிவிப்பையும் பொறுத்து முதலீடுகளை தீர்மானிக்கலாம் என்பதால் இந்திய பங்குச்சந்தையில் தற்போது ஊசலாட்டம் நிலவி வருகிறது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
அல்ட்ராடெக் சிமெண்ட்
பவர் கிரிட்
பார்தி ஏர்டெல்
மஹிந்திரா & மஹிந்திரா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
இறக்கம் கண்ட பங்குகள்:
மஹிந்திரா
லார்சன் & டூப்ர
பஜாஜ் ஃபைனான்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
இண்டஸ்இண்ட் வங்கி
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் குறைந்து 81.58 ஆக உள்ளது.