Stock News: சரிவில் இருந்து மீண்டது இந்திய பங்குச்சந்தை - ஆசிய, அமெரிக்க பங்குச்சந்தைகளால் நிகழ்ந்த மாற்றம்!

இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Stock News: சரிவில் இருந்து மீண்டது இந்திய பங்குச்சந்தை - ஆசிய, அமெரிக்க பங்குச்சந்தைகளால் நிகழ்ந்த மாற்றம்!

Tuesday November 21, 2023,

1 min Read

இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பங்குச்சந்தை நிலவரம் (21/11/2023)

நேற்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 265.61 புள்ளிகள் உயர்ந்து 65,920 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 83.25 புள்ளிகள் உயர்ந்து 19,777 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
stock

உயர்வுக்கான காரணம் என்ன?

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை ஏற்றத்துடன் வர்த்தகமாகின. அதேபோல், நேற்று மாலை அமெரிக்க சந்தைகள் சாதகமான நிலையில் முடிவடைந்தன. இதன் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தை வர்த்தகமும் இன்று பச்சை வண்ணத்திற்கு மாறியுள்ளது.

ஏற்றம் கண்ட பங்குகள்:

ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல்

டாடா ஸ்டீல்

டைட்டன்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

இன்ஃபோசிஸ்

இறக்கம் கண்ட பங்குகள்:

லார்சன் & டூப்ரோ

மாருதி

நெஸ்லே

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

இந்திய ரூபாயின் மதிப்பு: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து 83.32 ஆக உள்ளது.