Stock News: ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை; இந்த இரண்டு துறைகள் தான் காரணமா?

- +0
- +0
இந்திய பங்குச்சந்தையானது இன்றும் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (24/01/2023):
கடந்த வாரத்தின் பெரும்பாலான நாட்களில் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தையானது, இன்று முதல் நாளிலேயே உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 129.65 புள்ளிகள் அதிகரித்து 61,051 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 21.80 புள்ளிகள் அதிகரித்து 18,140 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க பணவீக்கம் கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதும், சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் ஆசிய பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றமும், இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையைப் பொறுத்தவரை ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா போன்ற வங்கிகளின் காலாண்டு நிதி அறிக்கை நல்ல லாபத்தை பதிவு செய்துள்ளது. அதேபோல், ஐ.டி. நிறுவன பங்குகளின் வர்த்தகமும் அதிகரித்துள்ளது இந்திய பங்குச்சந்தை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
இன்ஃபோசிஸ்
டிசிஎஸ்
டெக் மஹிந்திரா
ஹெச்சிஎல் டெக்
எஸ்பிஐ
கோடக் வங்கி
ஹெச்டிஎஃப்சி ட்வின்ஸ்
நெஸ்லே
இறக்கம் கண்ட பங்குகள்:
என்டிபிசி
டாடா ஸ்டீல்
எல்&டி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டைட்டன்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிந்து 81.38 ஆக உள்ளது.

Gold Rate Chennai: 43 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை; இன்றும் கிடுகிடு உயர்வு!
- +0
- +0