Stock News: உயர்வில் ‘ஐ.டி’ - ஆட்டம் கண்ட ‘நிதி நிறுவனங்கள்’ - பங்குச்சந்தை தொடர் சரிவு!
இந்திய பங்குச்சந்தையானது இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையானது இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (24/03/2023):
இந்திய பங்குச்சந்தையானது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித உயர்வைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டு எண்கள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 132.63 புள்ளிகள் சரிந்து 57,797 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 58.70 புள்ளிகள் சரிந்து 17,016 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க ஃபெடரல் வங்கி நேற்று வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தியது சர்வதேச அளவில் பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இரண்டு முன்னணி வங்கிகளின் சரிவைத் தொடர்ந்து குறைந்த அளவிலான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் டாலரின் மதிப்பு உயரத்தொடங்கியுள்ளது, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அடித்து தூக்கிய ஐ.டி. பங்குகள்:
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய ஐ.டி. நிறுவன பங்குகள் உயர்வுடன் வர்த்தகமானது. காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஐ.டி. பங்குகள் 1.50 சதவீத உயர்வுடன் வர்த்தகமானது முதலீட்டாளர்களுக்கு சற்றே நிம்மதி அளிக்கும் வகையில் அமைந்தது.
ஹெச்.சி.எல்.டெக் 1.89 சதவீதமும், இன்ஃபோசிஸ் 1.74 சதவீதமும், டெக் மஹிந்திரா 1.51 சதவீதமும் உயர்ந்தன. இன்று அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 1.34 சதவீதம் உயர்ந்ததால், டிசிஎஸ் 1.30 சதவீதமாக உயர்ந்தது.
நிதி நிறுவன பங்குகள் சரிவு:
பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 0.23 சதவீதம் அதிகரித்திருந்தாலும், மும்பை பங்குச்சந்தையில் நிதி நிறுவன பங்குகளில் ஏற்பட்ட கடும் சரிவு பிற துறைகளின் வர்த்தகத்தையும் கடுமையாக பாதித்தது. நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் 25/50 0.64 சதவீதமும், நிஃப்டி பைனான்சியல் சர்வீசஸ் 0.33 சதவீதமும் சரிந்ததால் ஒட்டுமொத்த வர்த்தகமும் சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது.
எச்டிஎஃப்சி லைஃப் 2.95 சதவீதமும், எஸ்பிஐ லைஃப் 2.48 சதவீதம், பஜாஜ் ஃபின்சர்வ் 1.73 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 1.38 சதவீதம் சரிந்தன.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஹெச்சிஎல் டெக்
இன்ஃபோசிஸ்
டெக் மஹிந்திரா
டிசிஎஸ்
விப்ரோ
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி லைஃப்
எஸ்பிஐ லைஃப்
பஜாஜ் பைனான்ஸ்
டைட்டன்
பஜாஜ் ஃபின்சர்வ்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து 82.24 ஆக உள்ளது.
Gold Rate Chennai: உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை; கிடுகிடு உயர்வுக்கு காரணம் என்ன?