Stock News: பங்குச்சந்தை- சென்செக்ஸ் 380 புள்ளிகள் உயர்வு- நிப்டி 24,000 கடந்தது!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 378 புள்ளிகள் உயர்ந்து 79,422 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 119 புள்ளிகள் உயர்ந்து 24,032.90 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமையான இன்று (29-11-2024) ஏற்றம் கண்டுள்ளன. சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின் படி, சுமார் 380 புள்ளிகள் அதிகரித்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடும் நேற்றைய சரிவு நிலையிலிருந்து இன்று மீண்டுள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:10 மணி நிலவரப்படி, 378 புள்ளிகள் உயர்ந்து 79,422 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 119 புள்ளிகள் உயர்ந்து 24,032.90 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 62 புள்ளிகள் உயர நிப்டி ஐடி குறியீடு 212 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 127 புள்ளிகளும் மிட்கேப் புள்ளிகளும் அதிகரித்துள்ளன. செக்டார்களில் நிப்டி எனெர்ஜி, பார்மா, ஹெல்த்கேர், மீடியா பங்குகள் 1% அதிகரித்தது.
காரணம்:
அயல்நாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் நேற்று சுமார் ரூ.11 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீட்டை வாபஸ் பெற்றதால் சரிந்த சந்தை இன்று முக்கியப் பங்குகளின் கொள்முதல் காரணமாக அதிகரித்தது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
சிப்ளா
அதானி எண்டெர்பிரைசஸ்
சன்பார்மா
எம் அண்ட் எம்
இறக்கம் கண்ட பங்குகள்:
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்
ஸ்ரீராம் பைனான்ஸ்
ஐடிசி
கோல் இந்தியா
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.49 ஆக உள்ளது.