Stock News: RBI எடுத்த அதிரடி முடிவு; பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் குஷியோ குஷி!
இந்திய ரிசர்வ் வங்கி இன்று வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது இந்திய பங்குச்சந்தையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (08/02/2023):
நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட மாற்றமும், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வட்டி விகிதம் குறித்த அறிவிப்பும் இந்திய பங்குச்சந்தை உயரக் காரணமாக அமைந்துள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 360.93 புள்ளிகள் அதிகரித்து 60,646 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 117.45 புள்ளிகள் அதிகரித்து 17,838 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
இந்திய ரிசர்வ் வங்கி இன்று வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது இந்திய பங்குச்சந்தையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி:
கடந்த வாரம் மத்திய பட்ஜெட் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் கூட்டம் நேற்று மும்பையில் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் பேங்க் ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 6வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் ஏற்கனவே காத்திருந்தது போல் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் முதலீடுகள் அதிகரித்து வருகிறது.
அதானி பங்குகளின் நிலை என்ன?
அதானி குழுமத்தின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் 15 சதவீத உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது இந்திய பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் 10 சதவீதமும், அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் 7 சதவீதமும் அதிகரித்துள்ளது.
பிற நிறுவனங்களைப் பொறுத்தவரை, அதானி ட்ரான்ஸ்மிஷன் லிமிடெட் அதானி வில்மர், அதானி டோட்டல் கேஸ் என்.டி.டி.வி.யின் பங்குகளும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
பஜாஜ் ஃபைனான்ஸ்
டிசிஎஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இன்ஃபோசிஸ்
ஹெச்சிஎல் டெக்
இறக்கம் கண்ட பங்குகள்:
பார்தி ஏர்டெல்
சன் பார்மா
என்டிபிசி
பவர் கிரிட்
மாருதி
இந்துஸ்தான் யுனிலீவர்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் அதிகரித்து 82.66 ஆக உள்ளது.
Gold Rate Chennai: உச்சம் தொட்ட தங்க விலை - சவரன் ரூ.43,000-த்தை கடந்து விற்பனை!