Stock News: உயரும் சென்செக்ஸ்; சரிவில் நிஃப்டி; காரணம் என்ன?

By Kani Mozhi
September 21, 2022, Updated on : Wed Sep 21 2022 10:35:54 GMT+0000
Stock News:  உயரும் சென்செக்ஸ்; சரிவில் நிஃப்டி; காரணம் என்ன?
வாரத்தின் மூன்றாவது நாளான இன்று மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் நிஃப்டி புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் நிஃப்டி புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்13.44 புள்ளிகள் அதிகரித்து 59,733 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 13.40 புள்ளிகள் சரிந்து 17,802 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
Stock

காரணம்: அமெரிக்க பெடரல் ரிசர்வின் இரண்டு நாள் பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) கூட்டம் இன்று நிறைவடைகிறது. ஃபெட் தலைவர் ஜெரோம் பவல் தலைமையிலான குழு 75 புள்ளிகள் வரை வட்டி விகித உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது இந்திய பங்குச்சந்தையில் அழுத்ததை உருவாக்கியுள்ளது.


ஏற்றம் கண்ட பங்குகள்:


நெஸ்லே இந்தியா

எம்&எம்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (எச்யுஎல்)

டாடா ஸ்டீல்

பார்தி ஏர்டெல்

மாருதி சுஸுகி

சன் பார்மா

ஐடிசி


இறக்கம் கண்ட பங்குகள்:


இண்டஸ் இண்ட் பேங்க்

ஹெச்டிஎஃப்சி

டிசிஎஸ்

மஹிந்திரா பேங்க்

இன்போசிஸ்

விப்ரோ

ஹெக்சிஎல் டெக்


ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் அதிகரித்து 79.74 ரூபாயாக உள்ளது.