Stock News: கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை; அதானி பங்குகளின் நிலவரம் என்ன?
வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தையானது கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தையானது கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (06/02/2023):
கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் இந்திய பங்குச்சந்தையானது கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதானி குழும பங்குகளும் தொடர்ந்து 8வது நாளாக சரிந்து வரும் இந்திய பங்குச்சந்தையின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 426.70 புள்ளிகள் குறைந்து 60,449 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 129.35 புள்ளிகள் சரிந்து 17,725 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
இந்தியத் தகவல் தொழில்நுட்பப் பங்குகள் 1.1%க்கு மேல் சரிந்தது இந்திய பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமெரிக்க பண்ணை அல்லாத வேலை வாய்ப்பு தரவுகளின் படி, 5,17,000 ஆயிரம் வேலை வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க ஃபெடரல் வங்கி தனது வட்டி விகித உயர்வை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்பதால், அமெரிக்க ஐ.டி. நிறுவனங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் சில பெரிய அமெரிக்க நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளதால் அவற்றின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
மேலும் பொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருவதும் இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்துள்ளது.
அதானி பங்குகளின் நிலை என்ன?
அதானி நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி நிறுவனப் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. அதானி குழும நிறுவனமான அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் மட்டுமே 7.60 புள்ளிகள் உயர்ந்து 506.45 ஆக விற்பனையாகி வருகிறது.
பிற நிறுவனங்களைப் பொறுத்தவரை, அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் 2.95 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் 5 சதவீதமும், அதானி ட்ரான்ஸ்மிஷன் லிமிடெட் 10 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளது. இதேபோல், கிரின் எனர்ஜி 5 சதவீதமும், அதானி பவர் லிமிடெட் 5 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 5 சதவீதமும் சரிந்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஐடிசி
ஆக்சிஸ் பேங்க்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
லார்சன் அண்ட் டூப்ரோ
இண்டஸ்இண்ட் பேங்க்
பேங்க் ஆஃப் பரோடா
பந்தன் பேங்க்
ஐடிஎஃப்சி
இறக்கம் கண்ட பங்குகள்:
இன்ஃபோசிஸ்
ஹெச்சிஎல் டெக்
டெக் மஹிந்திரா
விப்ரோ
ஏசியன் பெயிண்ட்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரித்து 82.08 ஆக உள்ளது.