பருவநிலை மாற்றம் தொடர்பான ஆப் உருவாக்கி இந்தியாவை பெருமைப்படுத்திய மாணவர்கள்!

By YS TEAM TAMIL|10th Sep 2020
ஆயுஷ் சங்கரன், ஜஷித் நாரங் ஆகிய இரு மாணவர்கள் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றின் தீமைகளை மொபைல் செயலி வாயிலாக உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றனர்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

மும்பையைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஜூலை மாதம் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடத்திய ‘ஆப் இன்வெண்டர் ஹேக்கதான் 2020’ போட்டியில் பாராட்டுகளைப் பெற்று நம் நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளனர்.


இந்த இரு மாணவர்களும் Climate Catastrophe – Earth in Dearth என்கிற பெயரில் பருவநிலை மாற்றம் தொடர்பான செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த ஆப் மக்களின் தேர்வு என்கிற பிரிவில் முதலிடத்தையும் நடுவர்களின் தேர்வு என்கிற பிரிவில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 300 பேர் பங்கேற்றனர் என `தி லாஜிக்கல் இந்தியா’ தெரிவிக்கிறது.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த மாணவர்கள் தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டுள்ளனர். பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றின் தீமைகளை மொபைல் செயலி வாயிலாக உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றனர்.


இந்த மாணவர்களில் ஒருவர் பெயர் ஆயுஷ் சங்கரன். பத்து வயதான இவர் மாலாட் பகுதியில் உள்ள பில்லபாங் ஹை இண்டர்நேஷன்ல் ஸ்கூல் பள்ளியில் படித்து வருகிறார். மற்றொரு மாணவரான ஒன்பது வயது ஜஷித் நாரங் போவாய் பாம்பே ஸ்காட்டிஷ் ஸ்கூலில் படிக்கிறார்.

“விருது வென்றது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவுமே இந்த பிராஜெக்டில் பணிபுரிந்தோம். வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. மக்களின் தேர்வு என்கிற பிரிவில் முன்னணியிலும் நடுவர்களின் தேர்வு என்கிற பிரிவில் 4வது இடத்திலும் இருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றி கோடிங் பகுதியில் மேலும் தீவிரமாக செயல்பட மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது,” என்று ‘இந்தியா எஜுகேஷன் டயரி’ இடம் ஆயுஷ் சங்கரன் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியின் ஒரு பகுதியாக பருவநிலை மாற்றம், வளங்களை சிறப்பாக ஒதுக்குதல், சுகாதாரப் பராமரிப்பு, தொலைதூர கற்றல் மற்றும் பணி, வறுமை ஒழிப்பு, ஒன்றாக வாழ்தல், சமூக மற்றும் இனம் சார்ந்த நீதி, செயற்கை நுண்ணறிவின் சமூக தாக்கம் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சனைகளில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.


எனினும் ஆயுஷ், ஜஷித் இருவரும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் கண்டு உந்துதல் பெற்றதால் பருவநிலை மாற்றம் தொடர்பான செயலியை உருவாக்கத் தீர்மானித்தனர்.


ஒரே வாரத்தில் இருவரும் வெற்றிகரமாக செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். கற்றல், பரிசோதனை, விளையாட்டு என மூன்று பிரிவுகளில் இந்தச் செயலியை உருவாக்கப்பட்டுள்ளது.


கற்றல் பிரிவில் பருவநிலை மாற்றம் தொடர்பான வினா விடையை முயற்சித்து பருவநிலை மாற்றம் தொடர்பாக தீவிரமாக செயல்படுவோர் குறித்துத் தெரிந்துகொள்ளலாம். சோதனை பிரிவில் பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு தேர்வுகளில் இருந்து பதிலளிக்கவேண்டும்.


அவர்களது அன்றாட வாழ்க்கைமுறையை அடிப்படையாகக் கொண்டு கார்பன் அடிச்சுவடுகளை கணக்கிடவேண்டும். மூன்றாவதான விளையாட்டுப் பிரிவில் காடழிப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என இரண்டு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. BHIS பள்ளி முதல்வர் டாக்டர் மது சிங் கூறும்போது,

“ஆயுஷின் சாதனையை நினைத்து பெருமை கொள்கிறோம். இந்த பெருந்தொற்று சமயத்தில் வெவ்வேறு செயலிகளுக்காக மூன்று வெவ்வேறு விருதுகள் வென்றுள்ளார். தொடர்ந்து புதுமை படைத்தால் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் எதையும் சாத்தியப்படுத்தமுடியும் என்று நிரூபித்துள்ளார்,” என்றார்.

கட்டுரை: THINK CHANGE INDIA