Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

Zoho முன்னாள் ஊழியர்கள் தொடங்கி உலகளவில் பிரபலமான 5 நிறுவனங்கள்!

ஜோஹோ மாஃபியாவின் நோக்கம் ஒன்றுதான். வளர்ச்சியடையவேண்டும், மற்றவர்கள் வளர்ச்சியடைய உதவவேண்டும். இந்த SaaS அப்ளிகேஷன் நிறுவனம் எண்ணற்ற ஊழியர்கள் சொந்தமாக ஸ்டார்ட் அப் முயற்சி துவங்க ஊக்குவிக்கும் வகையிலான சூழலை உருவாக்கியுள்ளது. அவ்வாறு உலகளவில் செயல்படும் 5 நிறுவனங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

Zoho முன்னாள் ஊழியர்கள் தொடங்கி உலகளவில் பிரபலமான 5 நிறுவனங்கள்!

Saturday April 20, 2019 , 4 min Read

மற்ற இந்திய நிறுவனங்களால் செய்ய முடியாததை ஜோஹோ நிறுவனம் செய்துள்ளது. உலகம் முழுவதும் அலுவலகங்களைக் கொண்ட இந்நிறுவனம் பல்வேறு இந்திய நிறுவனங்கள் உலகளவில் செயல்படவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் உந்துதலளித்துள்ளது.

பலர் பெரியளவில் சிந்திக்க ஜோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உந்துதலளித்துள்ளார்.

“பல தலைமுறைகள் நீடித்திருக்கும் நிறுவனத்தை உருவாக்கவேண்டும் என்பதே நோக்கம்,” என்கிறார் ஸ்ரீதர்.

ஜோஹோ உலகம் முழுவதும் க்ளௌட் சார்ந்த மென்பொருள் தொகுப்பு மற்றும் SaaS அப்ளிகேஷனை வழங்குகிறது. கிரீஷ் மாத்ருபூதம் நிறுவிய Freshworks உலகம் முழுவதும் சிறு வணிகங்களுக்கு மென்பொருள் சப்போர்ட் வழங்கப்படும் விதத்தை மாற்றியமைத்தது. ஃப்ரெஷ்வொர்க்ஸ் கடந்த ஆண்டு ஒரு பில்லியன் டாலர் வணிகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இணை நிறுவனர் குமார் வேம்பு நிறுவிய SaaS ஈஆர்பி ‘கோஃப்ரூகல்’ (GoFrugal) நிறுவனம் இந்தியாவில் 30,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களைச் சென்றடைந்துள்ளது.

“ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப வணிகத்தை இந்தியாவிற்கு வெளியே உருவாக்குவது குறித்து உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? இது நிச்சயம் சாத்தியமே,” என்கிறார் குமார்.

ஃப்ரெஷ்வொர்க்ஸ், கோஃப்ரூகல் இரண்டுமே ஜோஹோ குழுவிலிருந்து வெளிபட்டு நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது. இதேபோல் சந்தையில் சிறப்பிக்கக் காத்திருக்கும் மற்ற நிறுவனங்களும் உள்ளது. இந்த ’ஜோஹோ மாஃபியா’ வளர்ச்சி அடைவதில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் வகையில் வளங்களை பகிர்ந்துகொண்டு திட்டங்களை பரிமாறிக்கொள்கிறது. 

ஜோஹோ குழுவிலிருந்து வெளிவந்து மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைய உள்ள 5 ஸ்டார்ட் அப்களை யுவர்ஸ்டோரி பட்டியலிட்டுள்ளது.

Facilio : கட்டிடங்கள் நிர்வகிக்கப்படும் முறையை மாற்றுகிறது

கட்டிடங்கள் பிரிவில் அன்றாடம் பல ஜிகாபைட் தரவுகள் உருவாக்கப்படுகிறது. இந்தத் தரவுகள் முறையாக பயன்படுத்தப்படாததால் இதுவரை எந்தத் தகவலும் சேமிக்கப்படவில்லை. பழைய டிஜிட்டல் அணுகல் முறைகள் இரண்டு விஷயங்களை மட்டுமே செய்யும். அதாவது பிரச்சனைகள் ஏதேனும் இருக்கும்போது சிகப்பு நிறத்தைக் காட்டும். மற்ற பெரும்பாலான நேரங்களில் பச்சை நிறத்திலேயே காணப்படும்.

ஆனால் சென்னையைச் சேர்ந்த Facilio அதன் மென்பொருள் கொண்டு அனைத்தையும் ஒன்றிணைக்கத் தீர்மானித்தது. HVAC சிஸ்டம்ஸ், லைட்டிங், மின் கட்டுப்பாடு போன்றவற்றின் திறனில் காணப்படும் ஏற்ற இறக்கங்களை Facilio சுட்டிக்காட்டுகிறது. இந்த சொத்துக்கள் திறம்பட நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்யும் இந்நிறுவனம் ஆக்செல் பார்ட்னர்ஸ், டைகர் க்ளோபல் ஆகிய நிறுவனங்களிடமிருந்து 6.4 மில்லியன் டாலர் உயர்த்தியுள்ளது.

”ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிட மேலாண்மையில் ஐஓடி துறையில் மென்பொருள் புதுமை படைப்பதற்கான வாய்ப்புகள் உலகளவிலான வாய்ப்பாக மலரத் துவங்கியுள்ளது. மிகப்பெரிய ஐஓடி நிறுவனங்களில் ஒன்றை இந்தியாவிலிருந்து உருவாக்கமுடியும் என்கிற நம்பிக்கை இருந்தது,” என்றார் Facilio இணை நிறுவனர் பிரபு ராமச்சந்திரன்.

இவர் இருபதாண்டுகளுக்கு முன்பு ஜோஹோ நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.

Azooka Life Sciences - ஆராய்ச்சி பயன்பாடுகளுக்காக பாதுகாப்பான சாயங்களை உருவாக்குகிறது

மருத்துவ மற்றும் உயிர் அறிவியல் (மனிதர்கள் அல்லாத) ஆய்விற்கு தாவரம் சார்ந்த சாயத்தை உருவாக்கும் ஒரே இந்திய நிறுவனம் இதுதான். சந்தையில் உள்ள பெரும்பாலான சாயங்கள் செயற்கையானவை. இதைத் தொடர்ந்து ஆய்வக சூழலில் வைத்திருந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.  

ஆய்வகங்களில் டிஎன்ஏ-விலிருந்து திசுக்களை பிரித்துக்காட்டவும், பயிர் ஆய்வில் புரோட்டீன்களை பிரித்துக்காட்டவும், உணவுப் பாதுகாப்பிலும், நோய் எந்த இடைவெளியில் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள மருத்துவ கண்டறிதல் முறையிலும் சாயங்கள் பயன்படுத்தப்படுகிறது.

பல்வேறு ஆய்வு உதவி மானியங்களை வென்றுள்ள இந்நிறுவனம் ஐஐஎஸ்சி பெங்களூருவில் தலைமையகத்தைக் கொண்டு உலகளவில் செயல்படுகிறது.

“ஆய்வகச் சூழலை பாதுகாப்பானதாக உருவாக்க விரும்புகிறோம். மருத்துவ ஆய்வுகளில் தாவர சாயங்கள் பயன்படுத்தப்படுவதை வழக்கமாக மாற்ற விரும்புகிறோம்,” என்றார் Azooka Life Sciences இணை நிறுவனர் அலெக்ஸ் பால்.

இவர் ஜோஹோ நிறுவனத்தில் பத்தாண்டுகள் பணியாற்றியுள்ளார். மற்றொரு இணை நிறுவனரான டாக்டர் ஃபாத்திமா பெனாசீர் ஐஐஎஸ்சி-யில் நடத்திய ஆய்வுகளுக்கு பிரபலமானவர்.

சார்ஜ் பீ (Charge Bee): தொடர் கட்டண சேகரிப்பை தானியங்கிமயமாக்குகிறது

தொடர் பில்லிங் முறையைக் கண்காணிப்பதிலும் நிர்வகிப்பதிலும் சிரமங்களை சந்திப்பவர்களுக்கு ’சார்ஜ் பீ’ சந்தா அடிப்படையிலான மேலாண்மை தளத்தை வழங்குகிறது. முழுமையாக தானியங்கிமயமான Saas பில்லிங் தீர்வுகளைக் கொண்டு சந்தாதாரர்களாக இணைந்திருக்கும் வணிகங்களுக்கு சேவையளிக்கிறது.

இந்நிறுவனத்தை ராஜாராமன், தியாகு, சரவணன் கேபி, க்ரிஷ் சுப்ரமணியம் ஆகிய நான்கு நண்பர்களும் இணைந்து நிறுவியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம் ஸ்ட்ரைப், பிரெயின்ட்ரீ, பேபால் போன்ற முன்னணி கட்டண கேட்வேக்களுடன் இணைக்கப்படும் மென்பொருளை வழங்குகிறது. இதன் மூலம் வணிகங்கள் தொடர் கட்டண சேகரிப்பை தானியங்கிமயமாக்கலாம். அத்துடன் இன்வாய்ஸ் தயாரித்தல், வரி, கணக்கியல், இமெயில் அறிவிப்பு, SaaS மெட்ரிக்ஸ், வாடிக்கையாளர் மேலாண்மை போன்றவற்றையும் தானியங்கிமயமாக்குகிறது.

ஹிப்போ வீடியோ: தனித்தேவைக்கேற்ற அடுத்த தலைமுறை வீடியோ மார்க்கெட்டிங் சேவையை வழங்குகிறது

கார்த்தி மாரியப்பன், நிலம் சந்த், ஜெயின், ஸ்ரீனிவாசன் சந்தானகிருஷ்ணன் ஆகியோரால் நிறுவப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த இந்த மார்க்கெட்டிங் தளம் வணிகங்கள் வீடியோக்களை உருவாக்கவும், எடிட் செய்யவும், பகிர்ந்துகொள்ளவும், ஆராயவும் உதவுகிறது. வணிகங்கள் வீடியோக்களை இணைக்கவும், தனித்தேவைக்கேற்ற வீடியோக்களை உருவாக்கவும், மொத்தமாக அதிகளவிலான இ-மெயில் பிரச்சாரங்களை அனுப்பவும், விரிவான வீடியோ திறன் அறிக்கைகளை பெறவும், தனிப்பட்ட முறையிலான வீடியோக்களுடன் வாடிக்கையாளர்களுடன் இணையவும் உதவுகிறது. அதிகளவிலான இ-மெயில் பிரச்சாரங்களே இந்நிறுவனத்தின் தனித்துவமான சேவையாகும்.

”இ-மெயில் பிரச்சாரங்களில் குறிப்பிட்ட நபரின் பெயர் தொடர்பு பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு அவை வீடியோவில் இணைக்கப்படுகிறது,” என்றார் கார்த்தி.

ஹிப்போ வீடியோ இதுவரை Freshworks, Lessonly, Tailwinds, Chargebee, Essilor, Goulet Pens உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சேவையளித்துள்ளது.

சர்வேஸ்பேரோஸ் (SurveySparrow): கணக்கெடுப்புகளை உரையாடல்களாக மாற்றுகிறது

ஜோஹோ முன்னாள் பொறியாளரான சுபின் செபாஸ்டியன், ஜோஹோ முன்னாள் ஊழியர் ஷிஹாப் முகமத் ஆகிய இருவரும் இந்நிறுவனத்தை நிறுவியுள்ளனர். இந்நிறுவனம் சலிப்பூட்டும் கருத்துக்கணிப்புகளை உரையாடல்களாக மாற்றும் வகையில் இலவச ஆன்லைன் கணக்கெடுப்பு டூல்கள் மற்றும் சந்தை ஆய்வு மென்பொருளை வழங்குகிறது.

சென்னையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் ஸ்லேக், ஹப்ஸ்பாட் போன்றவற்றை இணைக்கிறது. இதன் மூலம் இலக்காகக் கொண்டுள்ள நபர்களிடம் இருந்து எளிதாகக் கருத்துகளை சேகரிக்க வலைதளம், மொபைல், சமூக தளங்கள், இ-மெயில் போன்றவற்றில் கணக்கெடுப்புகள் பகிர்ந்துகொள்ளப்பட உதவுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா | தமிழில் : ஸ்ரீவித்யா