டிவிஎஸ் மோட்டார்ஸ் புதிய நிர்வாக இயக்குனராக சுதர்ஷன் வேணு பொறுப்பு ஏற்பு!

By Durga
டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக சுதர்ஷன் வேணு பொறுப்பேற்றுள்ளார்.
3 CLAPS
0

2014 ஆம் ஆண்டு முதல் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் இணை நிர்வாக இயக்குனராக பதவி ஏற்ற சுதர்ஷன் வேணு தற்போது டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக பதவி ஏற்று இருக்கிறார்.

சுதர்ஷன் வேணு டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கும் வேணு ஸ்ரீனிவானசனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. டிவிஎஸ் நிறுவனத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கையில் மிகப் பெரிய பங்களிப்பு இவரை சேரும்.

உள்நாட்டு வாகன நிறுவனமாக திகழும் டிவிஎஸ் மோட்டார், இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமடைந்தது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சுதர்ஷன் வேணு பொறுப்பேற்று இருக்கிறார். இதற்கு முன்பு வரை இணை நிர்வாக இயக்குனராக இருந்த சுதர்ஷன் வேணு ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளில் டிவிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர்.

TVS managing director sudarshan venu

டிவிஎஸ் நிறுவனம் மின்சார இரு சக்கர வாகனப் பிரிவில் பல்வேறு முன்னோக்கிய திட்டங்களைக் கொண்டிருக்கிறது. இந்த பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹீரோ உள்ளிட்ட மோட்டார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியாளராக திகழ்கிறது. அதேபோல், மறுபுறம் ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏதர் எனர்ஜி போன்ற நிறுவனங்களுடன் எலெக்ட்ரிக் வாகனப்பிரிவில் கடுமையான போட்டியாக திகழ்கிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுள்ள சுதர்ஷன் வேணு டிவிஎஸ் நிறுவனத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசனின் மகனாவர்.

பதவியேற்ற சுதர்ஷன் வேணு இதுகுறித்து கூறுகையில்,

“இந்த சிறப்பு வாய்ப்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். எதிர்காலத்தை நோக்கி மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எனது தந்தை மற்றும் சர் ரால்ஃப் ஆகியோரின் தொடர்ச்சியான வழிகாட்டுதல்கள் உடனும் குழுவின் ஆதரவுடனும் எதிர்கால செயல்பாட்டை எதிர்நோக்குகிறேன். உலகளவில் தொழில்துறைக்கு இது ஒரு சுவாரஸ்யமான நேரம், இதில் முன்னணியில் இருப்பதில் நான் ஆர்வமாக உள்ளேன்,” எனக் கூறினார்.

Latest

Updates from around the world