இனி கூகுள் தாய் நிறுவனம் Alphabet-க்கும் சுந்தர் பிச்சை தான் சி.இ.ஓ

கூகுள் தாய் நிறுவனம் ’ஆல்பபெட்’ன் சி.இ.ஓ லாரி பேஜ் விலகியதால் சுந்தர் பிச்சை அதற்கும் சி.இ.ஓ ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

4th Dec 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சனை, அதன் தாய் நிறுவனமான ’ஆல்பபெட்’ 'Alphabet' நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகவும் பொறுப்பேற்கிறார். ஆல்பபெட் நிறுவன சி.இ.ஓ பொறுப்பில் இருந்து கூகுள் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் விலகிக் கொண்டுள்ளதை அடுத்து சுந்தர் பிச்சை ஆல்பபெட் நிறுவனத்தையும் வழி நடத்தும் பொறுப்பை ஏற்கிறார்.


இதன் மூலம் இந்திய அமெரிக்கரான சுந்தர் பிச்சை, உலகின் செல்வாக்கு மிக்க வர்த்தகத் தலைவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

கூகுள்

21 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட கூகுள் உலகின் முன்னணி தேடியந்திரமாக உருவாகி இருப்பதோடு, இ-மெயில், பிரவுசர், வரைபட சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பரந்து விருந்து மாபெரும் இணைய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. மேலும் கூகுள் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், தானியங்கி கார்கள் உள்ளிட்ட ஆய்விலும் ஈடுபட்டு வந்தது.


கடந்த 2015ம் ஆண்டு, கூகுள் நிறுவனம் சீரமைக்கப்பட்டு, ஆல்பபெட் எனும் தாய் நிறுவனம் உண்டாக்கப்பட்டு அதன் கீழ் கூகுள் தனி நிறுவனமானது, கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக இந்திய அமெரிக்கரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். ஆல்பபெட் நிறுவன சி.இ.ஓவாக, நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் செயல்பட்டு வந்தார்.


சுந்தர் பிச்சை தலைமையின் கீழ், கூகுள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இனி இந்த பொறுப்பையும் சேர்த்து வகிப்பார் என லாரி பேஜ் அறிவித்திருக்கிறார்.


இது தொடர்பான அறிவிப்பை, கூகுள் நிறுவனர்கள், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் நிறுவன ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அறிவித்துள்ளனர்.

"நிறுவனத்தை நடத்த வேறு சிறந்த வழி இருக்கும் போது, நிர்வாக பதிவி வகிக்கக் கூடியவர்களாக தாங்கள் ஒரு போதும் இருந்ததில்லை,” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

"ஆல்பபெட் மற்றும் கூகுளுக்கு இனி தனியே இரண்டு சி.இ,.ஓக்கள் மற்றும் ஒரு தலைவர் தேவையில்லை. இனி, கூகுள் மற்றும் ஆல்பபெட் ஆகிய இரண்டு நிறுவனங்களின் சி.இ.ஓவாக சுந்தர் பிச்சை செயல்படுவார். கூகுளை வழிநடத்தும் பொறுப்பு மற்றும் ஆல்பபெட் நிறுவன முதலீடுகள் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு இனி அவருடையது” என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.


"கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களில் நீண்ட கால ஈடுபாடு கொண்டுள்ளோம். இயக்குனர் குழு உறுப்பினர்கள், பங்குதாரர்கள் மற்றும் இணை நிறுவனர்களாக தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருப்போம். மேலும், சுந்தர் பிச்சையுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி திட்டமிட்டுள்ளோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பொறுப்பு ஆல்பபெட் நிறுவன அமைப்பையோ, தினசரி செயல்பாடுகளையோ பாதிக்காது என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

”கூகுள் மற்றும் கம்ப்யூட்டிங்கின் எல்லையை விரிவாக்குவதற்காக மற்றும் கூகுளை அனைவருக்கும் பயனுள்ளதாக்குவதற்காக நாங்கள் ஈடுபட்டுள்ள ஆழமான பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபடுவோம்,” என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

அதே நேரத்தில், ஆல்பபெட் மற்றும் பெரிய சவால்களை தொழில்நுட்பம் மூலம் எதிர்கொள்ளும் அதன் கவனம் குறித்து உற்சாகம் அடைகிறேன், என்றும் அவர் இ-மெயிலில் தெரிவித்துள்ளார்.


கூகுள் சி.இ.ஓவாக சுந்தர் பிச்சை செயல்பட்டு வரும் விதத்திற்கும், நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்திய அமெரிக்கரான சுந்தர் பிச்சை, மிகுந்த தன்னடக்கம் மற்றும் பயனாளிகள், பார்ட்னர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொழில்நுட்பத்திற்கான ஈடுபாட்டையும் அவர் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

"ஆல்பபெட் உருவாக்கம், கூகுள் சி.இ.ஓ, ஆல்பபெட் இயக்குனர் குழு உறுப்பினர் என 15 ஆண்டுகளாக அவர் எங்களுடன் இணைந்திருக்கிறார். ஆல்பபெட் நிறுவன அமைப்பு, மற்றும் தொழில்நுப்டம் மூலம் பெரிய சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகிய அதன் மதிப்புகள் மீது அவர் நம்பிக்கைக் கொண்டுள்ளார்,” என்றும் கூகுள் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.

”ஆல்பபெட் துவங்கிய பிறகு அவரை விட யாரையும் நாங்கள் அதிகம் சார்ந்திருந்ததில்லை. கூகுள் மற்றும் ஆல்பபெட்டை எதிர்காலத்திற்கு அழைத்துச்செல்ல வழி நடத்த அவரை விட சிறந்த தேர்வு இல்லை,” என்றும் கூகுள் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.

தொகுப்பு: சைபர்சிம்மன்

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

Our Partner Events

Hustle across India