'நான் அப்படிபட்டவள் அல்ல என்றேன்; தொடர்ந்து தாக்கப்பட்டேன்’ - நசிமாவின் சோகமும் உத்வேகமும்!

- +0
- +0
நசிமா. கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக பாலியல் சித்ரவதையை அனுபவித்த பெண். தனது வாழ்வில் நடந்த சோகத்தையும், அதன் மூலம் தற்போது மீண்டு வந்து, மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதையும் பகிர்ந்துகொள்கிறார்.
"நான் மேற்கு வங்கத்தின் புறநகரில் மிகவும் அன்பான குடும்பத்தில் வளர்ந்தேன். டிசம்பர் 2014 இல், நான் என் மைத்துனருடன் ஒரு மருத்துவரின் சந்திப்புக்கு சென்றேன். அவள் டாக்டருடன் இருந்தபோது நான் வெளியே காத்திருந்தேன். ஒரு நபர் என்னை வருமாறு அழைத்தார். அவர் என் முகத்தை மூடி என்னை அடித்தார். நான் மயக்கமடைந்தேன். நான் எழுந்து அவரிடம் எங்கள் இருப்பிடம் பற்றி கேட்டபோது, டெல்லியில் இருப்பதாகவும், நான் விற்கப்பட்டேன் என்றும் ஒருநபர் என்னிடம் கூறினார்.
நான் வீட்டிலிருந்து 1,400 மைல் தூரத்தில் இருந்தேன். நான் ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என்னை வாடிக்கையாளர்களிடம் அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார்கள். நான் அழைத்துச்செல்லப்பட்ட வீட்டில் அழைத்துச்சென்றவரின் அவரது மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் ஆகியோரும் அந்த வீட்டில் வசித்து வந்தனர், ஆனால் என்னுடன் பேச அனுமதிக்கப்படவில்லை. நான் ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டு கதவுகளும் ஜன்னல்களும் பூட்டப்பட்டிருந்தன.

முதல் வாடிக்கையாளர் என்னை அணுகியபோது, நான் அவரிடம்,
‘தயவுசெய்து இதை என்னிடம் செய்ய வேண்டாம். இதை உங்களுடன் என்னால் செய்ய முடியாது. நான் இந்த வகை வேலைகளைச் செய்ய மாட்டேன் என்றேன். உடனே அந்த ’வாடிக்கையாளர் உரிமையாளருடன் பேச திரும்பிச் சென்றார். பின்னர் நான் வாடிக்கையாளரால் அடித்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். அது எனக்கு மிகுந்த இரத்தப்போக்கை ஏற்படுத்தியது. அப்போது எனக்கு 14 வயதுதான்.
நான் வாடிக்கையாளர்களிடம் இணங்க மறுத்தபோதெல்லாம் கடுமையாகத் தாக்கப்பட்டேன். என் கால்கள் வீக்கமடைந்து வீங்கியிருந்தன. நான் கண்ணாடி ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்றேன். ஆனால், அந்த முயற்சியில் எனக்கு மிஞ்சியது காயங்கள் மட்டும்தான்.
இதையறிந்துகொண்ட என் கடத்தல்காரன் என்னைப் பிடித்து அடித்தான். பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தின் இந்த சுழற்சியில் நான் ஓர் ஆண்டு வாழ்ந்தேன். என் குடும்பத்தினரையோ அல்லது சூரியனையோ மீண்டும் பார்க்காமல், அங்கேயே இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்.
டிசம்பர் 2015ல், கடுமையான தாக்குதல் காரணமாக அதீத காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். தொடர் பாலியல் வன்முறை என் உடலில் பாதிப்பை ஏற்படுத்தியது. என்னை கடத்தியவருக்கு, வேறுவழியின்றி என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எனக்கு அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர் சொன்னபோது, அவர் என்னை அங்கேயே கைவிட்டார். நான் எச்.ஐ.வி பாசிட்டிவ் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர். எனக்கு 15 வயதுதான் அப்போது. மருத்துவர் என் மீது பரிதாபப்பட்டு எனக்கு இலவசமாக சிகிச்சையளிக்கத் தொடங்கினார், என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை நான் தெரிவித்தேன்.

காவல்துறையினர் என்னைப் பார்வையிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தனர். எல்லாவற்றையும் அவர்களிடம் சொன்னேன். ஒரு வாரம் கழித்து, அந்த நபர் என்னைத் தேட வந்தார். என்னை சித்திரவதை செய்து விபச்சாரத்திற்கு தள்ளிய குடும்பம் இதுதான் என்று போலீசாரிடம் சொல்லும் வாய்ப்பைப் பெற்றேன். காவல்துறையினர் இதைக் கேட்டு அவர்களை கைது செய்தனர்.
ஐ.ஜே.எம் ஒரு உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மருத்துவமனையில் நான் குணமடைவதற்கு ஆதரவளித்தனர். மேலும், கொல்கத்தாவில் உள்ள எனது குடும்பத்தினரை மீண்டும் தொடர்பு கொள்ள உதவினர். நான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்வரை என் அம்மா என்னுடன் தங்க வந்தார். நாங்கள் 2016 ஜனவரியில் ஒன்றாக வீடு திரும்பினோம்.
மே 2017ல், என்னைக் கடத்திய கடத்தல்காரன் மற்றும் டெல்லி குடியிருப்பில் என்னை பணயக்கைதியாக வைத்திருந்த நபர் மீது எனது சட்ட விசாரணை தொடங்கியது. டிபன்ஸ் வழக்கறிஞர் என்னை மிரட்டினார், நான் பொய் சொல்கிறேன் என்று கூறினார்.
நீதிபதி என்னிடம், ‘அவர்களுக்கு அஞ்சாதே, அன்பே. உங்களுக்கு நடந்த அனைத்தும் நியாயமற்றவை. எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்லுங்கள்,’ என்றார். எனது சட்ட வழக்கு கவனத்தை ஈர்க்கத் தொடங்கிய பிறகு, மாநில முதல்வரிடமிருந்தும், உள்துறை அமைச்சகத்திடமிருந்தும், உள்ளூர் நீதிமன்றத்திலிருந்தும் இழப்பீடு பெற்றேன்.
நான் குணமடைந்த பிறகு, நான் அடிக்கடி தொலைதூர கிராமங்களுக்குச் சென்று பள்ளிகளில் பேசுகிறேன், கடத்தலின் கொடூரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன். எனது கதையை தேசிய தொலைக்காட்சியில் கூட பகிர்ந்து கொண்டேன்.
எனது குடும்பத்தின் உறுதியற்ற ஆதரவைப் பெற்றது எனக்கு அதிர்ஷ்டம். பாலியல் கடத்தலுக்கு பலியானதால் ஏற்பட்ட களங்கத்தை நான் எதிர்த்துப் போராட வேண்டியதில்லை, மாறாக, குற்றவாளிகளுக்கு எதிராக தைரியமாக பேச எனக்கு அதிகாரம் கிடைத்தது. மிக முக்கியமாக, பொது நீதி அமைப்பு எனது வாழ்க்கைக்கான உரிமையை உறுதிப்படுத்தியது, என்கிறார் அவர்.
தமிழில்: மலையரசு
- பாலியல்-வன்முறை
- பாலியல்-பலாத்காரம்
- கடத்தல்
- Rescue
- HIV AIDS
- மனிதக் கடத்தல்
- survivor
- survivor series
- விபச்சாரம்
- Prostitution
- +0
- +0