‘சர்வைவர் தொடர்’ - போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு மற்றவர்களையும் காப்பாற்றும் 26 வயது நபர்!

போதை பழக்கத்தின் கொடுமையை மற்றவர்களுக்கும் புரியவைத்த இளைஞர்!
0 CLAPS
0

இந்த வார சர்வைவர் தொடரில் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாக இருந்த லட்சாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அந்த பழக்கத்தை விட்டுவிட்ட பின், அவர் எப்படி தன்னை போன்று இருந்தவர்களுக்கு சிறந்த வாழ்க்கை பெற உதவினார் என்பதை விரிவாக சொல்கிறார்.

”என் பெயர் லட்சாயா. மும்பையில் வசித்து வரும் எனக்கு வயது 26. நான் முதன்முதலில் 17 வயதில் புகையிலை மெல்லும் பழக்கத்திற்கு ஆளானேன். காதலியை பிரிந்து மன அழுத்தத்தில் இருந்ததால் விரைவாக இந்த பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டேன், எனது தனிமையை சமாளிக்க புகையிலை பழக்கம் எனது ஊன்றுகோலாக மாறியது. சில வருடங்களுக்குள், பழக்கத்தின் மோசமான விளைவுகளை நான் உணர ஆரம்பித்தேன். மார்பில் வலியும், நான் விடும் மூச்சு மிகவும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் தலைவலி இருந்தது. பழக்கத்தை விட்டுவிட பல முறை முயன்றும், நான் கஷ்டப்பட்டு இறுதியில் மெல்லும் புகையிலைக்கு திரும்பினேன்.

தலைவலி தாங்கமுடியாத போது, ​​எனது நிலை தீவிரத்தை உணர்ந்த ஒரு மருத்துவரை சந்திக்க முடிவு செய்தேன், LIfeFirst இல் உள்ள போதைக்குறைவு ஆலோசனையில் பங்கேற்றேன். ஆரம்ப நாட்களில், எனது கடந்த காலத்தையும் என் உணர்வுகளையும் என் ஆலோசகரான திருமதி ரதன்தீப் சாவ்லாவிடம் சொல்ல நான் மிகவும் தயங்கினேன்.

ஆனால் ஆலோசனையின் போது என் பார்வையை மாற்றிய ஒரு கேள்வி என்னவென்றால், ‘கல்வியைத் தொடரவும், அலுவலக வேலையைப் பெறுவதற்கான வாய்ப்பை புகையிலை எவ்வாறு தடுத்தது’ என்று அவர் கேட்டது தான். அது ஒரு திருப்புமுனையாக இருந்தது, நான் என் போதைக்கு எதிராக போராடி என் கல்வியை மீண்டும் தொடங்க முடிவு செய்தேன். தண்ணீர் குடிப்பது, தாமதம், திசை திருப்பவது, வேறு ஏதாவது செய்வது போன்றவை இதனை சமாளிக்கும் உத்திகளாக எனக்கு கற்றுக்கொடுக்கப்பட்டன.

ஆறு மாதங்களின் முடிவில், நான் புகையிலையை விட்டுவிட்டேன். எனது முன்னேற்றத்தை தெரிவிக்க எனது ஆலோசகருடன் தொடர்பில் இருந்தேன். புகையிலையை விட்டுவிட்டதிலிருந்து, என் உடல்நலம் மற்றும் மனநிலை இரண்டும் மேம்பட்டுள்ளன. அதன்பிறகு இனி மனச்சோர்வடையவில்லை. இதன்பின் கொரோனா காரணமாக ஏற்பட்ட லாக்டவுனில் நான் எனது கிராமத்திற்குத் திரும்பி, வேலை இல்லாமல் வாழ வேண்டியிருந்தாலும் அது என்னை மீண்டும் புகையிலை துஷ்பிரயோகத்திற்கு இட்டுச் செல்லவில்லை.

எனது சேமிப்பு மூலம் எனது குடும்பத்தை கூட பராமரிக்க முடிந்தது. எனது நண்பர்கள் எனக்கு புகையிலை வழங்கியபோது எப்படி வேண்டாம் என்று சொல்வது என்று ஆலோசகர்கள் அவருக்குக் கற்றுக் கொடுத்தனர். இன்னும் சிறப்பாக, நான் எனது நண்பர்களை புகையிலையை விட்டுவிட தூண்டினேன். எனது செயல்களால் ஈர்க்கப்பட்ட எனது நண்பர்களும் அதற்காக என்னைத் தேடத் தொடங்கினர். இது என் நம்பிக்கையை உண்மையில் அதிகரித்தது. எனது கிராமத்தில் புகையிலை மெல்லும் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு இந்த பழக்கத்தை கைவிட என்னால் முடிந்த உதவிகளை செய்ய முடிவு செய்தேன்.

நான் உண்மையில் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவன் என்பதால் இது எல்லாம் மிகப் பெரிய சாதனை. ஆனால் புகையிலையை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு உதவுவது என் நம்பிக்கையை அதிகரித்துள்ளது, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று தன் கதையை கூறி நெகிழ்கிறார் லட்சாயா.

கட்டுரை தொகுப்பு: மலையரசு