‘சர்வைவர் தொடர்’ – மகளின் இதய நோயை குணப்படுத்தப் போராடும் பெற்றோர்!

By YS TEAM TAMIL
November 23, 2022, Updated on : Wed Nov 23 2022 12:59:00 GMT+0000
‘சர்வைவர் தொடர்’ – மகளின் இதய நோயை குணப்படுத்தப் போராடும் பெற்றோர்!
மகாராஷ்டிராவைச் சேர்ந்த மங்கேஷ் சுதர் தனது மகள் லாவண்யாவிற்கு என்ஜிஓ உதவியுடன் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்துவிட்டு மூன்றாவது அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார்.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மங்கேஷ் சுதர் என்பரின் மகள் லாவண்யாவிற்கு இதயத்தில் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.


என்ஜிஓ உதவியுடன் குழந்தைக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டிருப்பது பற்றியும் மூன்றாவது அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருவது பற்றியும் அவரே உருக்கமாக பகிர்ந்துகொண்டிருக்கிறார். இனி அவரது வார்த்தைகளில்…


என் பெயர் மங்கேஷ் சுதர். நான் என் மனைவி, மகளுடன் மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் இருக்கும் கும்பர்லி கிராமத்தில் வசிக்கிறேன்.


என் மகள் பெயர் லாவண்யா. அவள் பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தது. அப்போது அவள் அடிக்கடி மூச்சுவிடுவதற்கு சிரமப்படுவாள். தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பாள். சின்னக் குழந்தை இப்படி அழுதுகொண்டே இருந்தால் பெற்றவர்கள் மனம் தாங்குமா? நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். அருகிலிருந்த அங்கன்வாடிக்குக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடுவோம்.

congenital heart disease

இப்படியே நாட்கள் நகர்ந்தன. என் குழந்தைக்கு ஒரு வயது ஆனது. அந்த சமயத்தில் ராஷ்டிரிய பால் சுரக்‌ஷா கார்யகிரம் (RBSK) சார்பாக எங்கள் கிராமத்தில் மருத்துவப் பரிசோதனை முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் என் மனைவியும் குழந்தையை அழைத்து சென்று காட்டினோம். அங்கிருந்த மருத்துவர்கள் என் குழந்தைக்கு பிறவி இதய குறைபாடு (Congenital Heart Disease) இருக்கலாம் என சந்தேகப்பட்டனர்.


என் குழந்தை லாவண்யா சரிவர சாப்பிடவில்லை. உயரமும் எடையும் அப்படியே இருந்தது. சற்றும் அதிகரிக்கவில்லை. இதனால் மருத்துவர் எங்களை மும்பையைச் சேர்ந்த மருத்துவ மையம் ஒன்றிற்கு குழந்தையை அழைத்து சென்று முழு உடல் பரிசோதனை செய்ய அறிவுறுத்தினார்.

எங்களுக்குத் தெரிந்த ஒருவர் Swades Foundation-இன் குழந்தைகளுக்கான இதய பராமரிப்பு திட்டத்தின்கீழ் இதயப் பிரச்சனைக்கு உதவி பெற்றிருந்தார். அந்த நிறுவனத்தை நாங்கள் தொடர்புகொள்ள அவர் எங்களுக்கு உதவினார்.

மும்பையின் Wockhardt Hospital-இல் லாவண்யாவை அனுமதிக்க இந்த என்ஜிஓ எங்களுக்கு உதவியது. அங்கு ஆரம்பகட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர். அதன் பிறகு, லாவண்யாவிற்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் எங்களிடம் கூறினார்கள்.


மேலும், அவளது நிலை சிக்கலாக இருப்பதாகவும் பல கட்டங்களாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர்.


இதற்கு 3.5 லட்ச ரூபாய் ஆகும் என்று தெரிந்துகொண்டோம். நான் ஒரு சாதாரண ட்ரக் டிரைவர். அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க முடியாத சூழலில் நான் தவித்தேன்.

Swades ஃபவுன்டேஷனில் இணைந்திருந்த வேறு சில பெற்றோர்களிடம் பேசினேன். அப்போதுதான் அந்த என்ஜிஓ பல குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது பற்றி தெரியவந்தது. எங்கள் மகளின் மருத்துவமனை செலவுகளையும் Swades என்ஜிஓ ஏற்றுக்கொண்டது.

2017ம் ஆண்டு எங்கள் மகள் லாவண்யாவிற்கு ஒன்றரை வயதிருக்கும். அப்போது முதல் அறுவை சிகிச்சை நடந்தது. அவளுக்கு மூன்று வயதிருக்கையில் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


இப்போது லாவண்யாவிற்கு ஏழு வயதாகிறது. அவள் அபாய கட்டத்தை கடந்துவிட்டாள். நன்றாக சாப்பிடுகிறாள். அவளது உடல் எடையும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

கோவிட் சூழலுக்குப் பிறகு தற்போது புனேவில் இருக்கும் ஜுபிட்டர் மருத்துவமனைக்கு அவள் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறாள்.


ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவளை அங்கு கூட்டி செல்கிறோம். லாவண்யாவிற்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் முடிந்திருந்தாலும் அவளுக்கு விரைவில் இன்னொரு இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளது.

மூன்றாவது அறுவைசிகிச்சை செய்யப்படவேண்டிய சூழலில் Swades அறுவை சிகிச்சைக்கான செலவில் ஒரு பகுதியை கொடுத்துவிடும். மேலும், 18,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு செலவுகளுக்கு வழங்கிவிடும். மூன்று நபர்களுக்கான உணவு, போக்குவரத்து செலவு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்தத் தொகையை Swades அதன் பார்ட்னர் மருத்துவமனைக்குக் கொடுத்துவிடும்.

Swades குழுவின் பிரதிநிதி நோயாளியையும் அவரது பெற்றோரையும் பார்ட்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்வார். குடும்பத்தினர் சார்பாக அங்குள்ள மருத்துவமனை ஊழியர்களிடம் பேசி அனைத்து ஒருங்கிணைப்பு பணிகளையும் இவர் கவனித்துக்கொள்வார்.


இந்தப் பிரதிநிதிகள், கலக்கத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகின்றனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகும்கூட நோயாளியின் குடும்பத்தினருடன் தொடர்ந்து இணைப்பில் இருந்து அவர்களது அவசர தேவைகளுக்கு உதவி வருகின்றனர்.


லாவண்யா தொடர்ந்து பள்ளிக்கு செல்கிறாள். நன்றாக படிக்கிறாள். நடனம் ஆடுவது அவளுக்கு பிடிக்கும். நிச்சயம் ஒரு நாள் அவள் மற்ற குழந்தைகளைப் போல் ஓடி, ஆடி, விளையாடி மகிழ்வாள் என நம்புகிறோம்.


ஆங்கில கட்டுரையாளர்: மங்கேஷ் சுதர் | தமிழில்: ஸ்ரீவித்யா

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற