Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

SVB திவால் நெருக்கடி: இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் அதிர்வுகளும் பின்னணியும்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த எஸ்.வி.பி வங்கி தற்போது திவால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

SVB திவால் நெருக்கடி: இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் அதிர்வுகளும் பின்னணியும்

Monday March 13, 2023 , 3 min Read

இந்தியாவின் துணிகர மூலதன நிறுவனங்கள் (venture capital firms) மற்றும் தனியார் பங்கு நிறுவனங்கள் (private equity firms) சிலிக்கான்வேலி வங்கி (SVB) கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்குமாறு போர்ட்ஃபோலியோ நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கியிருந்தன.

வீழ்ச்சியடைவதற்கு முன்பாகவே இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சிலிக்கான்வேலி வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்கும் முயற்சிக்கு பெரிய தடை ஏற்பட்டுள்ளது. காரணம், அமெரிக்கக் கட்டுப்பாட்டாளர்கள் வங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிர்ச்சி கண்டுள்ளன.

இந்த முடிவு, “சிறிய அளவிலான ஸ்டார்ட் அப்களுடன் ஒப்பிடும்போது பெரிய ஸ்டார்ட் அப்களை கடுமையாக பாதிக்கும்” என்று ட்ரூலி பினான்சியல் என்ற சிறு வணிகங்களுக்கான புது வங்கியின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி காஞ்சன் குமார் யுவர்ஸ்டோரி இணையதளத்திடம் கூறினார்.

பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஓர் அறிக்கையில், ‘காப்பீடு செய்யப்பட்ட வைப்புத்தொகைகள் மார்ச் 13 திங்களன்று வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமாறு செய்யப்படும். அதேநேரத்தில் "காப்பீடு இல்லாத வைப்புத்தொகையாளர்கள்" 250,000 டாலருக்கும் அதிகமான தொகைகளுக்கு பெறப்பாட்டுரிமை சான்றிதழான "ரிசீவர்ஷிப் சான்றிதழை" பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“250,000 டாலர் என்ற இந்தத் தொகை ஒரு பெரிய நிறுவனத்திற்குப் போதாது. அதுவும் இப்போது சம்பள நேரம் என்பதைப் பார்க்கும்போது நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது” என்கிறார் காஞ்சன் குமார்.

பின்டெரெஸ்ட் மற்றும் ஷாப்பிஃபை போன்ற பெரிய பெயர் பெற்ற நிறுவனங்களைப் பட்டியலில் கொண்ட சிலிக்கான்வேலி வங்கியினுடைய இந்தச் சிக்கல் எப்போது தொடங்கியது எனில், இந்த வங்கி 21 பில்லியன் டாலர் பத்திரங்களை விற்றதாகவும், அதன் நிதியை மேம்படுத்த 1.75 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்க தயாராகி வருவதாகவும் கூறியதிலிருந்து சிக்கல்கள் தோன்றின.

வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பீதி பரவியது, மேலும், அதன் இத்தகைய முடிவுகள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன, இதனால், சந்தை மூலதனத்தில் சுமார் 60% அழிந்தது.

முன்னதாக, இந்தியாவில் உள்ள பல வென்ச்சர் கேபிடல் மற்றும் தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள் தங்கள் எஸ்.வி.பி கணக்குகளில் இருந்து தங்கள் பணத்தை நகர்த்துமாறு போர்ட்ஃபோலியோ நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கியிருந்தன.

நியோ வங்கி Salt.Pe போன்ற எல்லை தாண்டிய பணம் செலுத்துதற்குரிய அனுசரணை அமைப்புகள் அமெரிக்க வங்கியிலிருந்து தங்கள் நிதியை தங்களது இந்திய துணை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் கணக்குகளுக்கு மாற்றுமாறு பல இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வேண்டுகோள்கள் விடுத்தன.

“சில ஸ்டார்ட்அப்கள் பீதியுடன் வேண்டுகோள்கள்” என்று Salt.Pe இணை நிறுவனர் உதிதா பால் யுவர்ஸ்டோரியிடம் கூறினார். வென்ச்சர் கேபிடல் மற்றும் தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள் அளித்த ஆலோசனைகள்:

“எஸ்.வி.பி அதன் நிலையை தெளிவுப்படுத்தி வரும் நிலையில் எஸ்.வி.பி.யில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்ற எங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து ஆலோசனை அளிக்கப்பட்டது” என்று பெங்களூரை தளமாகக் கொண்ட சாஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.வி.பி கட்டுப்பாட்டாளர்களால் கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு யுவர்ஸ்டோரியிடம் கூறினார். ஆனால், அவர் தன் பெயரை வெளியிட விரும்பவில்லை.

சில பெரிய சொத்து மதிப்புடைய தனிநபர்களைத் தவிர தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் துணிகர மூலதனம் மற்றும் தனியார் பங்கு நிறுவனங்கள் வங்கியின் வாடிக்கையாளர்களில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது பல நிலைகளிலும் வென்ச்சர் ஆதரவு நிறுவனங்களுக்கு சிறப்பு சேவைகளை வழங்கியது.

“பீட்டர் தியெல் ஆதரவு பெற்ற ஃபவுண்டர்ஸ் ஃபண்ட் அதன் போர்ட்ஃபோலியோ நிறுவனங்களுக்கு எஸ்.வி.பி.யில் இருந்து தங்கள் பணத்தை திரும்பப் பெற ஒரு ஆலோசனையை வழங்கிய முதல் நிறுவனங்களில் ஒன்றாகும்” என்று தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டின் பேராசிரியர் ரெபகா ஹவாங் யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார்.

“இப்போதைக்கு பெரும்பாலான நிறுவனங்கள் இடர் பாதுகாப்பு ஏற்பாட்டோடு மற்ற தெரிவுகளையும் தேடுகின்றன” என்று ரெபகா மேலும் கூறுகின்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத வளர்ச்சி நிலை ஃபின்டெக் நிறுவனத்தின் நிறுவனர் யுவர்ஸ்டோரியிடம் கூறுகையில், பல இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எஸ்விபியில் கணக்கு வைத்துள்ளன. மேலும் பல Y-காம்பினேட்டர் நிறுவனங்களும் கணக்கு வைத்துள்ளன என்றார்.

“கிட்டத்தட்ட எங்கள் எல்லை தாண்டிய நிறுவனங்கள் அனைத்தும் எஸ்.வி.பி.யுடன் வங்கி செய்கின்றன. அவற்றில் பலவும் பிரத்தியேகமாக அவ்வாறு செய்கின்றன. எனவே, வங்கியின் பணப்புழக்கம் ஒரு கவலையாக இருந்தால், அது நிறுவனத்தின் ரொக்க பணப்புழக்கத்திற்கான கவலையும் ஆகும்” என்று கிரேஸ்கேல் வென்ச்சர்ஸின் பங்குதாரர் சித்தார்த் வர்மா யுவர்ஸ்டோரியிடம் கூறினார்.

இதே நிதியம் தன் போர்ட்ஃபோலியோ நிறுவனத்திற்கும் தீர்வு காண முயற்சி செய்து வருகின்றது, காரணம் இந்நிறுவனம் சமீபமாக திரட்டிய நிதியை எஸ்விபி கணக்கில்தான் போட்டு வைத்துள்ளது என்றார் சித்தார்த் வர்மா.

தகவல் உறுதுணை: பாயல் கங்குலி


Edited by Induja Raghunathan