மே 6 முதல் தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் என்ன?

வரும் 6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!
6 CLAPS
0

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் பரவல் நாளுக்குள் நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தவிர்க்க முடியாத காரணங்களால் வரும் மே 6-ஆம் தேதி முதல் மே 20ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகளின் விவரங்கள்!

* அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீதப் பணியாளா்களுடன் இயங்க மட்டுமே அனுமதி.

* பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், தனியாா் பேருந்துகள், அரசுப் பேருந்துகள், வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமா்ந்து பயணிக்க அனுமதி

* மே 6 முதல் மளிகை, காய்கறி கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். ஆனால், ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

* வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதி கிடையாது.

* மளிகை, பலசரக்கு, காய்கறிக் கடைகளைத் தவிர்த்து இதர கடைகள் அனைத்தையும் திறக்க தடை.

* தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி.

* மீன் சந்தை, மீன் கடைகள், கோழி போன்ற இறைச்சிக் கடைகள் அனைத்தும் ஏற்கனவே இட்ட உத்தரவின்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க அனுமதியில்லை. அதேநேரம், மற்ற நாள்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி.

* ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் இயங்கத் தடை.

* மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு எந்த தடையும் கிடையாது. வழக்கம் போல செயல்படலாம்.

* அனைத்து ஹோட்டல்களிலும் பாா்சல் சேவை வழங்க மட்டும் அனுமதி.

* உள் அரங்குகள் மற்றும் திறந்தவெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சாரம் சார்ந்த எந்த நிகழ்ச்சிகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை.

* திரையரங்குகள் தடை.

* இறுதி ஊர்வலம் மற்றும் அதைச் சார்ந்த சடங்கு நிகழ்வுகளில் இனி 20 பேருக்கு மட்டுமே அனுமதி.

* அதேநேரம், முழு ஊரடங்கு நாள் உள்பட அனைத்து நாட்களிலும் திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க ஏற்கனவே இட்ட உத்தரவின்படி அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் 6-ஆம் தேதி தொடங்கி மே 20-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest

Updates from around the world