சரோஜா தேவி முதல் சிவகார்த்திகேயன் வரை: தமிழக அரசின் ‘கலைமாமணி' விருதுகள் அறிவிப்பு!

By malaiarasu ece|19th Feb 2021
கலைமாமணி விருதுகள் பெறும் கலைஞர்கள்!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும், தொன்மையான கலைவடிவங்களை பேணவும் திரைக்கலைஞர் முதல் தமிழகத்தின் பல்வேறு துறையை சேர்ந்த கலைஞர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.


கடந்த இரண்டு வருடங்களாக இந்த விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு மொத்தமாக அறிவித்துள்ளது.

கலைமாமணி

அதில், பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராமராஜன், பின்னணி பாடகி ஜமுனா ராணி ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஐசரி கணேஷ், இயக்குநர்கள் கவுதம் மேனன், மனோஜ்குமார், ரவிமரியா, லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகர், காமெடி நடிகர் யோகிபாபு, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தேவ தர்ஷினி, சங்கீதா, டிவி நடிகைகள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், டிவி நடிகர் நந்தகுமார் ஆகியோருக்கும் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இதனைபோல், இசையமைப்பாளர்கள் டி.இமான், தினா, ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, நடன இயக்குநர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டைப்பயிற்சியாளர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்கள் நாளை மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரவும் என்று தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருது அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசுக்கு கலைஞர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.