ஜூன் 14 - 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசின் தளர்வுகள் என்னென்ன?

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கும் தளர்வு அறிவிப்பு!
0 CLAPS
0

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நோய் தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இதற்கிடையே, நாளையுடன் ஊரடங்கு முடிவடைவதையொட்டி புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி, தமிழகத்தில் ஜூன் 14 முதல் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அந்தவகையில், தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.

11 மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வு விவரங்கள்!

* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீடு பராமரிப்பு சேவைகள் இ-பதிவுடன் அனுமதி.

* மின்பணியாளர், ப்ளம்பர், கணினி உள்ளிட்ட இயந்திரங்கள் பழுதுநீக்குவோர் வீடுகளுக்கு சென்று சேவையாற்றலாம். அதற்கு 9 - 5 மணி வரை அனுமதி.

* மிதி வண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9 மணி முதல் 2 மணி வரை செயல்பட அனுமதி.

* வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி; டாக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பேரும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பேரும் பயணிக்க அனுமதி.

* வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

* மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

* கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.

* ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் 25% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

27 மாவட்டங்களுக்கான தளர்வுகள்!

* கொரோனா குறைவாக உள்ள அதே 27 மாவட்டங்களில் அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதியின்றி காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

* டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் அனுமதி. காலை 10 முதல் மாலை 5 வரை டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படலாம்.

* பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களை நடைப்பயிற்சிக்காக மட்டும் காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்க அனுமதி.

* வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

* மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

* கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

* மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுதுநீக்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2மணி வரை செயல்பட அனுமதி!

* கட்டுமானப் பொருட்கள் விற்பனை கடைகள் காலை 9 - மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி.

* செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 - மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி.

* தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில்

செல்ல இ-பதிவு அவசியம்.

* பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் மேற்கொள்ள அனுமதி.

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

* இதோடு சேர்த்து இதர தொழிற்சாலைகளும் 33 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

* வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

* தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவிகிதம் பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதி கொடுக்கப்படுகிறது.

Latest

Updates from around the world