ஜூலை ஊரடங்கில் சென்னை, பிற பகுதிகளில் எதற்கெல்லாம் அனுமதி?

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர அனுமதி அளிக்கப்பட்ட தளர்வுகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

30th Jun 2020
 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

கொரோனா வைரஸ்‌ தொற்றை தடுப்பதற்காக பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழும்‌ ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும்‌, தளர்வுகளுடனும்‌ தற்போது ஜூன் 30ம் தேதி முடிவடைய உள்ள ஊரடங்கு, ஜூலை 31 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும்‌ மேலும்‌ நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

TN lockdown

பெருநகர சென்னை காவல்‌ துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும்‌ மற்றும்‌ முழு ஊரடங்கு அமலில்‌ உள்ள காஞ்சிபுரம்‌, திருவள்ளூா்‌, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ உள்ள பகுதிகளிலும்‌, நோய்‌ கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment Zones) மற்ற பகுதிகளில்‌ கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும்‌ 6.7.2020 முதல்‌ அனுமதி அளிக்கப்படுகிறது :


 • தகவல்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ தகவல்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த சேவை நிறுவனங்களில்‌, அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும்‌ வாகனங்களில்‌ 50 சதவீத பணியாளர்கள்‌ அதிகபட்சம்‌ 80 நபா்களுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது.


 • அனைத்து தனியார்‌ நிறுவனங்களும்‌, தொழில்‌ நிறுவனங்களும்‌ மற்றும்‌ ஏற்றுமதி நிறுவனங்களும்‌ 50 விழுக்காடு பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, இயன்ற வரை பணியாளர்கள்‌ வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார்‌ நிறுவனங்கள்‌ ஊக்குவிக்க வேண்டும்‌.


 • வணிக வளாகங்கள்‌ (Malls) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள்‌ மற்றும்‌ பெரிய கடைகள்‌ நகை, ஜவுளி போன்றறை 50% விழுக்காடு பணியாளர்களுடன்‌ செயல்படலாம்‌. மேலும்‌, ஒரே நேரத்தில்‌ அதிகபட்சம்‌ 5 வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ கடைக்குள்‌ வருவதை உறுதி செயது, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும்‌ வகையில்‌, அனுமதிக்கப்பட வேண்டும்‌. கடைகளில்‌, குளிர்‌ சாதன வசதி இருப்பினும்‌ அவை இயக்கப்படக்‌ கூடாது.


 • உணவகங்களில்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில்‌, சமூக இடைவெளியை கடைபிடிக்கும்‌ நோக்கத்துடன்‌, உணவகங்களில்‌ உள்ள மொத்த இருக்கைகளில்‌, 50 விழுக்காடு இருக்கைகளில்‌ மட்டும்‌ வாடிக்கையாளர்கள்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, உணவகங்களில்‌ குளிர்‌ சாதன வசதி இருப்பினும்‌ அவை இயக்கப்படக்‌ கூடாது.


 • தேநீர்‌ கடைகள்‌, உணவு விடுதிகள்‌ மற்றும்‌ காய்கறி கடைகள்‌, மளிகைக்‌ கடைகள்‌ ஆகியவை காலை 6 மணி முதல்‌ இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.


 • தேநீர்‌ கடைகளில்‌ உள்ள மொத்த இருக்கையில்‌ 50 விழுக்காடு அளவு மட்டும்‌ வாடிக்கையாளர்கள்‌ அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.


 • வாடகை மற்றும்‌ டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர்‌ தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, பயன்படுத்தலாம்‌.


 • ஆட்டோக்களில்‌, ஒட்டுநர்‌ தவிர்த்து, இரண்டு பயணிகள்‌ மட்டுமே பயணிக்கலாம்‌. சைக்கிள்‌ ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.


 • முடிதிருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்கள்‌ குளிர்‌ சாதன வசதியைப்‌ பயன்படுத்தாமல்‌, அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.


 • மீன்‌ கடைகள்‌, கோழி இறைச்சி கடைகள்‌, மற்ற இறைச்சி கடைகள்‌ மற்றும்‌ முட்டை விற்பனை கடைகள்‌, சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.


பெருநகர சென்னை தவிர, தமிழ்நாட்டின்‌ பிற பகுதிகளில்‌ (நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகள்‌ தவிர மற்ற பகுதிகளில்) (Except Containment Zones), 1.7.2020 முதலும்‌, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ முழு ஊரடங்கு அமலில்‌ உள்ள பகுதிகள்‌ மற்றும்‌ மதுரை மாவட்டத்தில்‌ மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்‌, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும்‌ திருப்பரங்குன்றம்‌ வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும்‌ 6.7.2020 முதலும்‌ கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும்‌ அனுமதி அளிக்கப்படுகிறது:

 • கிராமப்புரங்களில்‌ உள்ள சிறிய திருக்கோயில்கள்‌, அதாவது 10,000 ரூபாய்க்கும்‌ குறைவாக ஆண்டு வருமானம்‌ உள்ள திருக்கோயில்களிலும்‌, சிறிய மசூதிகளிலும்‌, தர்காக்களிலும்‌, தேவாலயங்களிலும்‌ மட்டும்‌ பொதுமக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக்கப்படும்‌. இத்தகு வழிபாட்டுத்தலங்களில்‌ சமூக இடைவெளி மற்றும்‌ பிற நோய்‌ தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல்‌ கடைபிடிக்க வேண்டும்‌. மாநகராட்சி, நகராட்சி மற்றும்‌ பேரூராட்சி பகுதிகளில்‌ உள்ள அனைத்து வழிபாட்டுத்‌ தலங்களுக்கும்‌, கிராமப்பகுதிகளில்‌ உள்ள பெரிய வழிபாட்டுத்‌ தலங்களுக்கும்‌ தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக்கப்பட மாட்டாது.
 • தொழில்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ ஏற்றுமதி நிறுவனங்கள்‌ 100 விழுக்காடு பணியாளர்களுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது.
 • தகவல்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ தகவல்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த சேவை நிறுவனங்கள்‌ 100 விழுக்காடு பணியாளர்களுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, 20 விழுக்காடு பணியாளர்கள்‌ வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்‌.
 • அனைத்து தனியார்‌ நிறுவனங்களும்‌ 100 விழுக்காடு பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, இயன்ற வரை பணியாளர்கள்‌ வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார்‌ நிறுவனங்கள்‌ ஊக்குவிக்க வேண்டும்‌.
 • வணிக வளாகங்கள்‌ (malls) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள்‌ மற்றும்‌ பெரிய கடைகள்‌ (நகை, ஜவுளி போன்றவற்றை) 50 விழுக்காடு பணியாளர்களுடன்‌ செயல்படலாம்‌. மேலும்‌, ஒரே நேரத்தில்‌ அதிகபட்சம்‌ 5 வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ கடைக்குள்‌ இருக்கும்‌ பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும்‌ வகையில்‌ அனுமதிக்கப்பட வேண்டும்‌. இதுவன்றி, கடைகளில்‌, குளிர்‌ சாதன வசதி இருப்பினும்‌ அவை இயக்கப்படக்‌ கூடாது.
 • தேநீர்‌ கடைகள்‌, உணவு விடுதிகள்‌ மற்றும்‌ காய்கறி கடைகள்‌, மளிகைக்‌ கடைகள்‌ ஆகியவை காலை 6 மணி முதல்‌ இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக்‌ உள்ளிட்ட இதர கடைகள்‌ காலை 10 மணி முதல்‌ இரவு 8 மணி வரை இயங்கலாம்‌.
 • உணவகங்களில்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில்‌, சமூக இடைவெளியை கடைபிடிக்கும்‌ நோக்கத்துடன்‌, உணவகங்களில்‌ உள்ள மொத்த இருக்கைகளில்‌, 50 விழுக்காடு இருக்கைகளில்‌ மட்டும்‌ வாடிக்கையாளர்கள்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, உணவகங்களில்‌ குளிர்‌ சாதன வசதி இருப்பினும்‌, அவை இயக்கப்படக்‌ கூடாது.
 • தேநீர்‌ கடைகளில்‌ உள்ள மொத்த இருக்கையில்‌ 50 விழுக்காடு அளவு மட்டும்‌ வாடிக்கையாளர்கள்‌ அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
 • அத்தியாவசியமற்ற பொருட்கள்‌ உட்பட அனைத்து பொருட்களையும்‌, மின்‌ வணிக நிறுவனங்கள்‌ (e-commerce) வழங்க அனுமதிக்கப்படுகிறது.
 • வாடகை மற்றும்‌ டாக்ஸி வாகனங்கள்‌ ஒட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது.
 • ஆட்டோக்கள்‌ இரண்டு பயணிகளுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள்‌ ரிக்ஷாவும்‌ அனுமதிக்கப்படுகிறது.
 • மீன்‌ கடைகள்‌, கோழி இறைச்சி கடைகள்‌, மற்ற இறைச்சி கடைகள்‌ மற்றும்‌ முட்டை விற்பனை கடைகள்‌ சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India